IPL 2018 தொடரின் 11-வது போட்டியில் 15_வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங்செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை குவித்தது.
கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ் ராணா மற்றும் குர்ரான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதனையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நரைனும் க்றிஸ் லின்னும் களமிறங்கினர்.
முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார் லின். அடுத்து வந்த உத்தப்பா - நரைன் ஜோடி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது.
தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்றது.
இதன் மூலம், ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த, ராஜஸ்தானின் சாதனை பயணமும் முடிவுக்கு வந்தது