ப்ளூவேல்-ஐ அடுத்து தற்கொலைக்கு தூண்டும் MOMO வாட்ஸ்-அப் கேம்!

ப்ளூவேல் கேம் போல தற்கொலைக்கு தூண்டும் மற்றொரு விளையாட்டு MOMO வாட்ஸ்-அப் கேம் உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் மூலமாக பிரபலமாகி வருகிறது! 

Written by - ZEE Bureau | Last Updated : Aug 6, 2018, 07:12 PM IST
ப்ளூவேல்-ஐ அடுத்து தற்கொலைக்கு தூண்டும் MOMO வாட்ஸ்-அப் கேம்!

ப்ளூவேல் கேம் போல தற்கொலைக்கு தூண்டும் மற்றொரு விளையாட்டு MOMO வாட்ஸ்-அப் கேம் உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் மூலமாக பிரபலமாகி வருகிறது! 

புளுவேல் கேம் விளையாட்டால் உலகம் முழுக்குள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் இறந்தனர். புளுவேல் கேமை நிறைவு பெறும் போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கட்டளையிடும். அதையும் நிறைவேற்றி 50 வது கட்டத்திற்கு சென்றால், அந்த கேம் தற்கொலை செய்யும் அளவுக்கு மனநிலையை உருவாக்கும். தற்போது புளுவேலை கேம்மை போலவே மோமோ என்ற சாவல் விடும் விளையாட்டும் தற்போது உலகம் முழுக்க பரவலாகி வருகிறது.

யார் இந்த மோமோ...?

டந்த 2016ல் ஜப்பான் டோக்கியோ நகரில் வெண்ணிலா கேலரியில் நடந்த கண்காட்சியில், ஒரு பொம்மை உருவம் வைக்கப்பட்டது. இந்த முகம் பேய் பிசாசு போன்று சித்தரிக்கும் வகையில் அவலட்சணம் கொண்டது.

மனதை பாதிக்கும் வகையில் உங்களது ஸ்மார்ட் போன் திரையில் வெளிர் தோலுடனும், வீங்கிய கண்களுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கும் அந்த பெண்ணின் பெயர் தான் "மோமோ". தைரியமிருந்தால் சவாலில் பங்கெடுங்கள் என ஓர் சவாலையும் விடலாம். இதில் பங்கெடுத்தால் உங்களை மன ரீதியாக பாதிக்கும் வகையிலான விஷயங்கள் நடக்கக்கூடும். லத்தீன் அமெரிக்க அதிகாரிகள் இது போன்ற செய்திகளை மக்கள் தங்களுக்குள் பரப்ப கூடாது என அறிவுறுத்தியுள்ளது மேலும் இந்த ஆன்லைன் விளையாட்டு எல்லையை மீறக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப் மூலம் மோமோவிற்கு நீங்கள் தகவல் அனுப்பினால் அது பதிலுக்கு உங்களுக்கு வன்முறையை சித்தரிக்கும் விதமான படங்களை அனுப்புவதாக அதன் பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த விபரீத விளையாட்டால் அர்ஜெண்டினாவில் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மோமோ சவாலானது அமெரிக்காவில் இருந்து நேபாளம் வரையிலும் பரவி வருகிறது. 

மோமோ சவாலானது தற்போது அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் வரை, அர்ஜென்டினாவில் இருந்து நேபாளம் வரை உலகம் முழுவதும் பரவிவருகிறது. ஸ்பெயினில் ''சமூக ஊடகத்தில் புதுப்போக்காக உருவெடுத்துவரும் இது போன்ற ஆபத்தமான சவால்களை மக்கள் தவிர்க்க வேண்டும்'' என அந்நாட்டு காவல்துறை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

மெக்சிகோவின் பாணியில் ஸ்பெயின் காவல்துறையும் டிவிட்டரில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த சவாலில் பங்கெடுப்பதை கைவிடுங்கள் என ஊக்கமிழக்கச்செய்யும் பணியை செய்து வருகிறது.

மோமோ-வில் உள்ள அபாயங்கள் என்ன?

முன்பின் அறியாத எண்ணுடன் தொடர்பு கொள்வது நல்ல யோசனை அல்ல. ஆனால் நீங்கள் ஏன் மோமோவை தவிர்த்து கடந்து போக வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்கள் இருக்கிறது என்கிறது மெக்சிகோ யுஐடிஐ காவல்துறை.

> உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் விவரங்கள் திருடப்படுகிறது. 

> இது வன்முறையை தூண்டும். ஏன் தற்கொலை செய்யக் கூடிய நிலைக்கு நம்மை தள்ளும்! 

> பயனர்கள் தொந்தரவுக்கு உள்ளாகலாம்

> பயனர்களை பயமுறுத்தி பணம் பறிப்பு செய்யப்படலாம்

> மன அழுத்தம், பதட்டம் மற்றும் இன்சோம்னியா எனும் தூக்கமின்மை நோய் உள்ளிட்டவற்றால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படலாம்.

அறியப்படாத எண்ணுடன் தொடர்பு கொள்ளவோ, அதனுடன் குறுஞ்செய்தி இணைப்புகளில் இணையவோ வேண்டாம் என இணைய குற்றவியல் வல்லுனர்கள்  அறிவுறுத்துகின்றனர். 

 

More Stories

Trending News