பெரும்பாலான மக்கள் தூங்கும் போது தலையணையை பயன்படுத்துகிறார்கள். ஒருசிலருக்கு தலையணை இல்லை என்றால் தூக்கம் வராது. அதிலும் ஒருசிலருக்கு தலைக்கு இரண்டு தலையணை, காலுக்கு ஒரு தலையணை வைத்தால் தான் தூக்கமே வரும். ஆனால் சிலருக்கு இவை தேவைப்படுவதில்லை. தலையணை பயன்படுத்தி தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு தூக்கப் பழக்கங்கள் உள்ளன. சிலருக்கு நேராக படுத்து தூங்குவது பிடிக்கும், சிலருக்கு திரும்பி படுப்பது பிடிக்கும். தூங்கும் விதத்தில் பெரிதாக பாதிப்புகள் ஏற்படாது என்றாலும், தலையணை வைத்து தூங்குவது உடலுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க | 5 நிமிடத்தில் பாத்ரூம் கமகமக்கும் வாசம் வீச இந்த 5 டிப்ஸ் பாலோ பண்ணுங்க
தலையணைகளை அதிகம் பயன்படுத்துவதால் அவை உங்கள் முகத்திற்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து, தோல் சுருக்கம் மற்றும் பருக்களை ஏற்படுத்தக்கூடும். தலையணைகளைப் பயன்படுத்தாதவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்காது, மேலும் பருக்கள் குறைவாகவும் இருக்கும். அதே போல, பலரும் தலையணை உறைகளை அடிக்கடி துவைப்பது இல்லை. இதன் காரணமாக அதில் படிந்து இருக்கும் எண்ணெய் மற்றும் தூசிகள் சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. தலையணைகளை நாம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறோம் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உயரமான தலையணை அல்லது இரண்டு தலையணை வைத்து தூங்கும் போது கழுத்து வலி ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை சரி செய்ய சிறிய அல்லது நல்ல பஞ்சு கொண்ட தலையணை பயன்படுத்த வேண்டும்.
மேலும் பெரிய தலையணை பயன்படுத்தும் போது இது உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்து, நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க சிறிய அல்லது மென்மையான தலையணையைப் பயன்படுத்துவது நல்லது. தூங்கும் போது உங்கள் கழுத்து வசதியாக இருக்க உதவும் தலையணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இருப்பினும் தொடர்ந்து உங்கள் கழுத்து வலிக்கிறது என்றால், மருத்துவரைப் பார்ப்பது நல்லது. சரியான தலையணை பயன்படுத்தாமல் இருந்தால், உங்கள் முதுகெலும்பை பாதிக்கலாம். இது உங்கள் கழுத்தில் உள்ள டிஸ்க்குகள் மற்றும் மூட்டுகளை காயப்படுத்தலாம். மிக உயரமான தலையணையைப் பயன்படுத்துவது உங்கள் முதுகுத்தண்டு வேகமாக தேய்ந்து ஸ்போண்டிலோசிஸுக்கு வழிவகுக்கும்.
தவறான தலையணையைப் பயன்படுத்துவதால் தொடர்ந்து கழுத்து வலி, தலைவலி மற்றும் தோள்பட்டை வலி ஆகியவற்றைக் கையாள்வது எரிச்சலூட்டும். இது நன்றாக உறங்குவதை கடினமாக்கும் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். நாம் தூங்கும் போது கழுத்து பகுதியின் இயற்கையான வளைவை சமமாக பார்த்து கொள்வது தான் தலையணையின் முக்கிய பயன்பாடாகும். ஒரு பெரிய தலையணையை பயன்படுத்துவதால், நமது மூளை மற்றும் முடிக்கு இரத்தம் சரியாகப் போவதை கடினமாக்குகிறது, இது முடி உதிர்தல் மற்றும் தோல் சேதத்திற்கு வழிவகுக்கும். தலையணை சரியாக இல்லாவிட்டால் தூக்கம் கெட்டுவிடும். மன அழுத்தத்தைக் குறைத்து நன்றாக தூங்குவதற்கு தலையணை இல்லாமல் தூங்க முயற்சிப்பது நல்லது.
மேலும் படிக்க | ITR Refund இன்னும் கிடைக்கவில்லையா? இவை காரணங்களாக இருக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ