இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் பிரபல இருசக்ர வாகனமான Benelli, இந்தியாவில் தனது நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது!
உலக அளவில் பிரபலமாக விளங்கும் Benelli நிறுவனம் தனது சூப்பர் பைக்குகளை இந்தியச் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஹைதராபாதில் தனது அசம்பல் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்திற்காக இந்நிறுவனம் தெலங்கானா மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள ஆலையை அமைக்க பணி, முதல் கட்டத்தில் 3 ஏக்கர் நிலத்தில் அசெம்பிளி யூனிட் அமைக்கும் என தெரிகிறது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ள ஆலை அமைக்கும் பணி 20 ஏக்கர் பரப்பில் நிறுவப்படவுள்ளது.
இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு 10,000 மோட்டார் சைக்கிளை அசெம்பிள் செய்து சந்தைக்கு கொண்டு வர முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மஹாவீர் குழும நிறுவனங்களுள் ஒன்றான ஆதிஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா நிறுவனத்துடன் Benelli கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் Benelli வாகனங்களை விற்கும் பணியினை ஆதிஷ்வர் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு சுமார் 3000 Benelli பைக்குகளை இந்தியாவில் விற்க ஆதிஷ்வர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
புதிதாக உறுவாகவுள்ள இந்த ஆலைக்கு தேவையான நிலம் முழுவதுமான இடத்தையும் தெலங்கானா மாநிலத்திலேயே இந்நிறுவனம் தேடி வருகின்றது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பிரீமியம் பைக்குகளுக்கு மவுசு கூடிவரும் நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவைகியல் ஏற்கெனவே பிரிட்டனின் டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவன, டிவிஎஸ் நிறுவனத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் கூட்டு சேர்ந்து தங்களது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது Benelli நிறுவனம் ஆதிஷ்வர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.