HDFC வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. வட்டியில் மிகப்பெரிய மாற்றம், உடனே படிக்கவும்

புதிய வட்டி விகிதங்கள் 27 நவம்பர் 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. மேலும் இந்த நிலையான வைப்புகளில் முன்கூட்டியே திரும்பப் பெறும் சாய்ஸ் இல்லை, அதனால் டெபாசிட்டரால் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை க்ளோஸ் செய்ய முடியாது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 28, 2023, 10:06 AM IST
  • HDFC திரும்பப் பெற முடியாத நிலையான வைப்பு விகிதங்களில் திருத்தங்களைச் செய்துள்ளது.
  • திரும்பப் பெற முடியாத FD-க்களுக்கு ஸ்வீப்-இன் வசதி மற்றும் பகுதியளவு திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படாது.
  • FD-கள் முன்கூட்டியே திரும்பப் பெறப்பட்டால், பொருந்தக்கூடிய வட்டி விகிதங்கள் நாமினிக்கு வழங்கப்படும்.
HDFC வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. வட்டியில் மிகப்பெரிய மாற்றம், உடனே படிக்கவும் title=

தனியார் துறை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கி, திரும்பப் பெற முடியாத (Non-withdrawable fixed deposits) நிலையான வைப்புத் தொகைக்கான (எஃப்டி) வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் 27 நவம்பர் 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த நிலையான வைப்புகளில் முன்கூட்டியே திரும்பப் பெறும் சாய்ஸ் இல்லை, அதனால் டெபாசிட்டரால் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை க்ளோஸ் செய்ய முடியாது. மறுபுறம் குடியுரிமை இல்லாத பிரிவினருக்கும் டெபாசிட் அனுமதிக்கப்படுகிறது. NRE கால வைப்புத்தொகைக்கான குறைந்தபட்ச காலம் 1 வருடம் ஆகும். மின்ட் செய்திகளின்படி, வட்டி விகிதங்களில் திருத்தத்திற்குப் பிறகு, HDFC வங்கி இப்போது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை அதிகபட்சமாக 7.45% மற்றும் இரண்டு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை 7.2% ரிட்டர்னை வழங்குகிறது. இந்த விகிதங்கள் 6 மாதங்களுக்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படும். இந்த விகிதங்கள் புதிய நிலையான வைப்புகளுக்கு பொருந்தும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

HDFC வங்கி திரும்பப் பெற முடியாத FD விகிதங்கள் ரூ. 2 கோடிக்கு மேல் அல்லது அதற்கு சமம்
1 வருடம் முதல் < 15 மாதங்கள் வரை - 7.45%
15 மாதங்கள் முதல் < 18 மாதங்கள் வரை 7.45%
18 மாதங்கள் முதல் < 21 மாதங்கள் வரை 7.45%
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 7.45%
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை 7.2%
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை 7.2%
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை 7.2%

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ரூ.18,000ல் இருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்கும் சம்பளம்

திரும்பப் பெற முடியாத FD என்றால் என்ன?
இந்த நிலையான வைப்புகளில் (Fixed Depost) முன்கூட்டியே திரும்பப் பெறும் சாய்ஸ் இல்லை, அதனால் டெபாசிட்டரால் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை க்ளோஸ் செய்ய முடியாது. ஆனால் நீதித்துறை, சட்டமியற்றும் இடம் அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகளின் வழக்குகள் அல்லது மரண உரிமைகோரல் போன்ற வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில், இந்த வைப்புத்தொகைகளை முன்கூட்டியே திரும்பப் பெற வங்கி அனுமதிக்கலாம். இத்தகைய சூழ்நிலைகளில், வைப்புத்தொகையின் அசல் தொகைக்கு வட்டி வழங்கப்படாது. முதலீட்டாளர் மரணத்தால் FD-கள் முன்கூட்டியே திரும்பப் பெறப்பட்டால், பொருந்தக்கூடிய வட்டி விகிதங்கள் நாமினிக்கு வழங்கப்படும்.

HDFC வங்கியின் புதிய FD விகிதங்கள்:
சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு, HDFC வங்கியானது 3% முதல் 7.20% வரையிலான வட்டி விகிதத்தை பொது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை மெச்சூரிட்டி அடையும் வைப்புகளுக்கு வழங்குகிறது. மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகைக்கு 3.5% முதல் 7.75% வரை வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். இந்த கட்டணங்கள் அக்டோபர் 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. இதயனிடையே சில நாட்களுக்கு முன்பு, நவம்பர் 21 ஆம் தேது, 2023 முதல் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட காலக்கட்டங்களில் FD வட்டி விகிதத்தை யெஸ் பேங்க் (Yes Bank) உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பெண்களுக்கான ஜாக்பாட் ஓய்வூதியத் திட்டங்கள்.. டபுள் லாபம் அள்ளலாம், உடனே படிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News