பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக அரசிடம் பல கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதும் ஒன்றாகும். பல மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த கோரிக்கை உள்ளது. இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன.
இது குறித்து மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அரசின் நிலைப்பாட்டை பற்றி கூறினார். ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு பெறும் ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்தத் தகவலை அவையில் தெரிவித்த அவர், அத்தகைய முன்மொழிவு எதுவும் அரசாங்கத்தின் முன் பரிசீலனையில் இல்லை என்று கூறினார்.
மாநிலங்களவை எம்பி கேடி சிங், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) மறுஆய்வு செய்வது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டார். என்பிஎஸ் -இன் சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத்தின் ஃபார்முலாவை மாற்றி, ஊழியர்களின் ஓய்வுக்கு முன் பெறப்பட்ட கடைசி சம்பளத்தில் 40 முதல் 45 சதவிகிதத்தை ஓய்வூதியமாக வழங்குவது பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்கிறதா என்பதை அவர் அறிய முயன்றார்.
மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: இவர்களுக்கு பழைய ஓய்வூதியம்... வந்தது உத்தரவு
இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்ய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது என்றும், ஆனால் அது இன்னும் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார். தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது குறித்த கேள்வியே எழவில்லை என்றும் சவுத்ரி மேலும் கூறியுள்ளார்.
எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தினால், அது மத்திய ஊழியர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இது அவர்களின் நிதி பாதுகாப்பை வலுப்படுத்தும். அவர்களின் வாழ்க்கை முறையையும் இது மேம்படுத்தும். இதை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநிலங்களிலும் ஓபிஎஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் OPS-ஐ திரும்பப் பெறுவதற்கான முடிவைப் பற்றி மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன. மேலும் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் திரட்டப்பட்ட நிதியைத் திரும்ப அளிக்குமாறும் கோரியுள்ளன.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாட்டில் ஆளும் திமுக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் பல குறைகள் இருப்பதாகவும், இது ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
- ஓபிஎஸ் இல் உள்ள அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு, கடைசியாக பெறப்பட்ட அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பாதி அரசு கருவூலத்தில் இருந்து ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அகவிலைப்படியும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை உயர்த்தப்படுகிறது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியதாரர் இறந்தவுடன் ஓய்வூதியதாரர் குடும்பத்திற்கு ஓய்வூதியமும் வழங்கப்படும்.
- என்பிஎஸ் என்பது ஒரு பங்களிப்புத் திட்டமாகும். இதில் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் பத்து சதவிகிதத்தை பங்களிக்க வேண்டும். ஊழியர்களின் என்பிஎஸ் கணக்கில் அரசாங்கம் 14% பங்களிக்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஒரு அரசு ஊழியர் தனது அடிப்படைச் சம்பளத்தில் 10% -ஐ தனது ஓய்வூதியத்திற்கு பங்களிக்க வேண்டும். மாநில அரசு 14% மட்டுமே பங்களிக்கும்.
- ஓய்வூதிய ஆணையம் அமல்படுத்தப்படும்போது, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியத் திருத்தத்தின் பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்... இனி ஓய்வூதியம் எக்குத்தப்பாக உயரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ