சித்ரா பௌர்ணமி: இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு!

சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நன்னாள் ஆகும். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Last Updated : Apr 19, 2019, 09:33 AM IST
சித்ரா பௌர்ணமி:  இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு! title=

சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நன்னாள் ஆகும். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சித்திரை மாதம் என்பது உலகிற்கே பகலில் ஒளியைத் தருகின்ற சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் அடையும் மாதமாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி என்று வெகுவிமர்சையாக ஆன்மீக அன்பர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் விசேஷமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதே போன்று வைணவ கோயில்கள் மற்றும் இதர தெய்வங்களின் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மற்ற எந்த பௌர்ணமி தினங்களை காட்டிலும் விசேஷ சிறப்புகள் வாய்ந்த இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு உங்களால் முடிந்த தான, தர்மங்கள் செய்வதால் உங்களுக்கு அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் ஏற்படும்.

நமது புராணங்களில் ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் செய்த பாவ புண்ணியங்களை கணக்கிட்டு அவனுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பதை தீர்மானிக்கும் எமதர்மராஜனின் கணக்காளராக சித்திரகுப்தன் இருக்கிறார். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நோய்நொடி இல்லாத வாழ்வும் பக்தர்கள் கிடைக்கப்பெறுவார்கள்.

இந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், நீர் மோர் போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்றுத்தரும்.

Trending News