வீட்டில் அதிக பல்லி தொல்லை இருக்கிறதா? இந்த வழிகளில் சரி செய்யலாம்!

Lizards Controlling Tips: பல்லிகள் வீட்டில் உள்ள சிறு சிறு பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. ஆனால் பலருக்கும் பல்லியை பார்த்தால் பயம் இருக்கும்.   

Written by - RK Spark | Last Updated : May 22, 2024, 01:13 PM IST
  • பல்லிகளைப் பார்த்தாலே எரிச்சல் வருகிறதா?
  • எளிய வழிகளில் வீட்டை விட்டு வெளியேற்றலாம்.
  • எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் அதிக பல்லி தொல்லை இருக்கிறதா? இந்த வழிகளில் சரி செய்யலாம்! title=

Lizards Controlling Tips: பல்லி நமது வீடுகளில் விரும்பத்தகாத விருந்தாளியாக இருந்து வருகிறது. சுவர்களில் இருக்கும் சிறு சிறு பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறது. என்னதான் வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டாலும் பலருக்கும் பல்லியை பார்த்தால் வெறுப்பும், பயமும் ஏற்படும். இதன் காரணமாகவே பல்லியை பார்த்தல் 10 அடி தூரம் செல்கின்றனர். வீட்டில் வெளிச்சம் இருக்கும் இடங்களில் பல்லியும் இருக்கும். ஆன்மிக ரீதியாகவும் பல்லி உடம்பில் விழுந்தால் நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதன் எச்சம் பட்டால் எரிச்சல் உணர்வும் ஏற்படும். இவற்றை தவிர பல்லி கொடுக்கும் சத்தமும் பலருக்கு பிடிப்பதில்லை. எந்த எந்த வழிகளில் பல்லியை வீட்டை விட்டு வெளியேற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | உங்கள் குழந்தையுடன் நெருக்கத்தை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!!

கருப்பு மிளகு தெளிப்பு: கருப்பு மிளகை பல்லியின் மீது தெளியுங்கள். இது பல்லிக்கு அதன் உடலில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். எனவே பல்லியின் சத்தம் வரும் இடங்களிலும், வீட்டின் மூலை முடுக்குகளிலும் கருப்பு மிளகை தெளிக்கவும். இதன் மூலம் பல்லியை வீட்டை விட்டு விரட்ட முடியும். 

நாப்தலீன் பந்துகள்: பூச்சிகளிடமிருந்து துணிகளை பாதுகாக்க பொதுவாக நாப்தலீன் பந்துகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதனை பயன்படுத்தி வீட்டில் உள்ள பல்லிகளை கூட விரட்டலாம். உண்மையில், பல்லிகளுக்கு நாப்தலீன் வாசனை பிடிக்காது. எனவே இதனை நாம் வீடுகளில் வைக்கும் போது இந்த வாசனை பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறும். 

முட்டை ஓடுகள்

முட்டையை உடைத்த பிறகு, அதன் ஓடுகளை குப்பைத் தொட்டியில் வீசாமல் பல்லிகளை விரட்ட பயன்படுத்தலாம். பல்லிகள் இருக்கும் சுவர்களின் மீது முட்டை ஓடுகளை வைக்கவும். அதில் இருந்து வரும் வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. எனவே அவை வீட்டை விட்டு வெளியேறும். 

வெங்காயம் மற்றும் பூண்டு: வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனை அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்த வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. எனவே வெங்காயம் மற்றும் பூண்டை சிறிதாக வெட்டி வீட்டின் மூலைகளில் வைக்கலாம். மேலும் அதன் சாற்றை வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் தெளிக்கலாம், இது பல்லி அருகில் வராமல் தடுக்கும்.

மறுப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் எடுத்துள்ளோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிச்சயமாக நிபுணர் ஆலோசனையைப் பெறுங்கள்.

மேலும் படிக்க | உங்க மொபைல் நம்பர் மாறிடுச்சா .. மறக்காம ‘இதை’ செய்திடுங்க.. இல்லாட்டி சிக்கல் தான்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News