பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.
எந்த நட்சத்திரக்காரர், எந்த இடத்தில் உள்ள கால பைரவரை வழிபடுவது சிறப்பு என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
Also Read | ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள்
1. அசுவினி - ஞான பைரவர் போரூர்
2. பரணி - மகா பைரவர் பெரிச்சியூர்
3. கார்த்திகை - அண்ணாமலைபைரவர் திருவண்ணாமலை
4. ரோகிணி - பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5. மிருகசீரிஷம் - ஷேத்திரபால் பைரவர் ஷேத்திரபால புரம்
6. திருவாதிரை - வடுக பைரவர் வடுகூர்
7.புனர்பூசம் - விஜயபைரவர் பழனி
8. பூசம் - ஆவின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம் - பாதாள பைரவர் காளஹஸ்தி
10.மகம் - நர்த்தன பைரவர் வேலூர்
Also Read | சிவபெருமானே நோய் தீர்க்கும் மருத்துவராய் அருள் பாலிக்கும் இடம்
11.பூரம் - பைரவர் பட்டீஸ்வரம்
12. உத்திரம் - ஜடாமண்டல பைரவர் சேரன்மாதேவி
13.அஸ்தம் - யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14.சித்திரை - சக்கர பைரவர் தர்மபுரி
15. சுவாதி - ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
16.விசாகம் - கோட்டை பைரவர் திருமயம்
17.அனுஷம் - ஸ்வர்ண பைரவர் சிதம்பரம், ஆடுதுறை,
18.கேட்டை - கதாயுத பைரவர் சூரக்குடி,
19.மூலம் - சட்டைநாதர் சீர்காழி
20.பூராடம் - வீரபைரவர் அவிநாசி, ஒழுகுமங்கலம்
21.உத்திராடம் - முத்தலைவேல் வடுகர் கரூர்
22.திருவோணம் - மாரித்தாண்டபைரவர் வயிரவன்பட்டி
23. அவிட்டம் - பலிபீட மூர்த்தி சீர்காழி, ஆறகளூர்
24. சதயம் - சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
25. பூரட்டாதி - அஷ்டபுஜ பைரவர் கொக்கரையான்பேட்டை
26. உத்திரட்டாதி - வெண்கல ஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27.ரேவதி - சம்ஹார பைரவர் தாத்தையங்கார்பேட்டை
Also Read | ஏழு குழந்தைகளை கருதரித்த பெண் பெற்றெடுத்தது 9 குழந்தைகளை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR