பானங்கள் உடலுக்கு நல்லது என்றாலும், சில பானங்களின் மூலப்பொருள் எது என்பது வெளியில் தெரிவதில்லை. பழங்கள், காய்கறிகள் அல்லது இறைச்சி (கோழி, மாட்டிறைச்சி, கடல் உணவுகள்) என இந்த உலகத்தில் சாப்பிடுவதற்கு பல உணவுப் பொருட்கள் இருக்கின்றன.
ஆனால் சீனா போன்ற நாடுகளில், பூச்சிகள், ஈக்கள் போன்றவற்றையும் உணவின் ஒரு பகுதியாக உள்ளன. அவர்களின் உணவுகள் நமக்கு வித்தியாசமானதாகத் தோன்றினாலும் (Different Foods)அது அவர்களின் உணவுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
பூச்சிகளை உண்பது காட்டுமிராண்டித்தனமானது என்று நீங்கள் நினைத்தால், கரப்பான் பூச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பீர் பற்றித் தெரிந்தால் என்ன சொல்வீர்கள்?
Also Read | பீர் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்! அற்புத வைத்தியம்
ஜப்பானில் கரப்பான் பூச்சியில் இருந்து பீர் தயாரிக்கப்படுகிறது. ஜப்பானில் 'கபுடோகாமா' (kabutokama) எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் இந்த பீர் தனிச்சிறப்பு பீர் என்று கூறப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்த பிரத்யேக பீரை ஜப்பானியர்கள் குடிக்கின்றனர்.
கரப்பான் பூச்சி பீர் என்ற வார்த்தையே, உங்களுக்கு வயிற்றில் ஒருவிதமான சிலிர்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் ஜப்பானில் உள்ளவர்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் குடிக்கிறார்கள். ஜப்பானின் இந்த சிறப்பு கரப்பான் பீர், Insect Sour அல்லது Konchu Sour என்று அழைக்கப்படுகிறது.
நன்னீரில் (freshwater) காணப்படும் கரப்பான் பூச்சிகளால் இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. இவை, மற்ற பூச்சிகள் மற்றும் மீன்களுக்கு உணவளிக்கின்றன. இந்த கரப்பான் பூச்சிகளை பிடித்து, அவற்றை வெந்நீரில் வேகவைத்து மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வைத்த பிறகு, அதிலிருந்து எடுக்கும் சாறு, பீராக மாற்றப்படுகிறது.
READ ALSO | பீர் பாட்டில்களின் நிறம் பழுப்பு, பச்சை நிறங்களில் இருப்பதற்கான காரணம்
டெய்லி ஸ்டார் (Daily Star) ஊடகத்தில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது. ஜப்பானில் ஆண் தைவான் கரப்பான் பூச்சி மிகவும் சுவையாக கருதப்படுகிறது. இது பழம் என்றும் கூறப்படுகிறது.
கரப்பான் பூச்சியை நல்ல தரமான இறாலுடன் ஒப்பிடுகின்றனர். இந்த பூச்சிகள் வேகவைத்து உண்ணப்படுகின்றன. மேலும், சூப்களில் சுவையூட்டிவதற்கும் பயன்படுத்தப்படுகிறது கரப்பான் பூச்சி.
கரப்பான் பூச்சி பீர் பாட்டிலின் விலை சுமார் 450 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பீர் ஜப்பானில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பயன்படுத்தப்படும் 'கபுடோகாமா' எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படுகிறது.
Also Read | பீர் பிரியர்கள் கவனத்திற்கு! அதிகமான பீர் ஆண்மையை பாதிக்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR