பிரிட்ஜ் சுத்தமாக வைத்திருக்க செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..!

குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்ய 5 எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும். இதன் மூலம் நிமிடங்களில் பிரிட்ஜ் சுத்தமாகவும் வாசனையற்றதாகவும் மாறிவிடும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2023, 03:31 PM IST
பிரிட்ஜ் சுத்தமாக வைத்திருக்க செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..! title=

கோடை காலத்தில் குளிர்சாதன பெட்டியின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் ஃப்ரிட்ஜை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. எனவே குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வதற்கான சில எளிய குறிப்புகளை இங்கே தெரிந்து கொள்வோம். 

பொருட்களை வெளியே எடுக்கவும்

ஃப்ரிட்ஜை சரியாக சுத்தம் செய்ய முதலில் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் பொருட்களை வெளியே எடுக்கவும். இப்போது குளிர்சாதன பெட்டியை அணைத்துவிட்டு, சுவிட்ச் போர்டில் இருந்து பிளக்கை அகற்றவும். இதனால் மின்சாரம் தாக்கும் அபாயம் இருக்காது.

ஐஸ் கட்டிகளை அகற்றுதல் 

குளிர்சாதனப்பெட்டியை சுத்தம் செய்வதற்கு முன் அதை டீஃப்ராஸ்ட் செய்ய மறக்காதீர்கள். இதன் மூலம், குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்படும் ஐஸ் எளிதில் உருகும். அதற்கு தண்ணீர் வடிகால் இருக்கும் இடத்திற்கு பிரிட்ஜை எடுத்துச் செல்லுங்கள். ஏனென்றால், குளிர்சாதன பெட்டியில் உள்ள தண்ணீர் வீட்டில் படாமல் இருக்கும்.

மேலும் படிக்க | DigiLocker: PAN கார்டு முதல் DL வரை ... வாட்ஸ்அப்பில் பதிவிறக்கம் செய்ய எளிய வழி!

வெந்நீர் பயன்படுத்துங்கள்

குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்ய வெந்நீரைப் பயன்படுத்துவது நல்லது. இதற்கு வெந்நீரில் சோப்பு சேர்த்து கரைக்கவும். இப்போது இந்த கரைசலில் ஒரு துணியை நனைத்து, அதை பிழிந்து, அதன் பிறகு குளிர்சாதன பெட்டியின் தட்டு மற்றும் டிராயரை சுத்தம் செய்யவும்.

வினிகர் மூலம் சுத்தம் செய்தல்

குளிர்சாதன பெட்டியின் கைப்பிடி மற்றும் கதவு மிகவும் அழுக்காக இருக்கும். அதை சுத்தம் செய்ய, வெள்ளை வினிகர் கலக்கி, அவற்றை சுத்தம் செய்யுங்கள். 

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

ஃபிரிட்ஜில் இருக்கும் போகாத அல்லது தீவிரமான கறைகளை நீக்க பேக்கிங் சோடா மற்றும் வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம். இதற்கு, 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில் 2 டீஸ்பூன் வினிகரை கலந்து பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை ஃப்ரிட்ஜின் கறையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து சுத்தமான துணியால் துடைக்கவும்.

கெட்ட வாசனைகள் நீங்க

ஃப்ரிட்ஜில் இருக்கும் கெட்ட வாசனைகள் நீங்க, பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டைக் கொண்டு ஃப்ரிட்ஜின் மூலைகளை சுத்தம் செய்யவும். அதே சமயம் ஃப்ரிட்ஜில் வாசனை வராமல் இருக்க சில புதினா இலைகளையும் வைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட், இலவச ரேஷனுடன் 1000 ரூபாய் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News