இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகுது

ராசிபலன் இன்று, 4 ஏப்ரல் 2022: மேஷம் முதல் மீனம் வரையிலானவர்களுக்கு திங்கட்கிழமை நாள் சிறப்பாக இருக்கும். திங்கள்கிழமை உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை ஆஸ்ட்ரோ குரு பெஜன் தருவாலாவின் மகன் சிராக் தருவாலாவிடமிருந்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 4, 2022, 06:09 AM IST
  • ராசிபலன் இன்று, 4 ஏப்ரல் 2022
  • கும்ப ராசிக்காரர்கள் பாராட்டுக்குரியவர்களாக மாறுவார்கள்
  • விருச்சிக ராசிக்காரர்கள் இலக்கை அடைவார்கள்
இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகுது title=

ராசிபலன் இன்று, 4 ஏப்ரல் 2022: மிதுனம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பு கூடும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். திங்கட்கிழமை உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை ஆஸ்ட்ரோ குரு பெஜன் தருவாலாவின் மகன் சிராக் தருவாலாவிடம் இருந்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் தெளிவான நிலைப்பாட்டை வைத்திருங்கள். வியாபாரக் கண்ணோட்டத்தில் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். சிலருக்கு வெளியூர் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

ரிஷபம்: அனைவரிடமும் கண்ணியமாகப் பேச வேண்டும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அரசுப் பணிகளில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. பணப் பரிவர்த்தனைகளில் வெற்றி உண்டாகும்.

மிதுனம்: இந்த நாள் எதை செய்ய நினைக்கிறீர்களோ, அதை செய்ய முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். 

கடகம்: இன்று உங்களுடைய முயற்சிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும்.

சிம்மம்: இன்று ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பொறுப்புகள் அதிகரிப்பதால் உங்களுடைய உடல் நலனில் அக்கறை இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்களின் மூலம் புதிய நட்பை வளர்த்துக் கொள்வீர்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறை ஏற்படும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக் கசப்புகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சுயதொழிலில் பன்மடங்கு லாபம் காண இருக்கிறீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

துலாம்: புதிய இலக்குகளை நிர்ணயித்து முயற்சிகளைத் தொடங்குவீர்கள். சில வியாபார விஷயங்களை புத்திசாலித்தனமாக கையாளலாம். செல்வ வளம் கூடும். இன்று எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லற வாழ்வில் சில புதுமைகள் ஏற்படும்.

விருச்சிகம்: தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் இலக்கையும் அடைவீர்கள். தொழிலை விரிவுபடுத்த வங்கியில் கடன் வாங்கலாம். புதிய உத்தியோகத்தில் பல வெற்றிகளைப் பெறுவீர்கள். உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடக்கும்.

தனுசு: இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு போக்குவரத்து தொடர்பான அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்: பெண்களுக்கு ஏற்ற நாள். நீங்கள் உற்சாகமாக உணர்வீர்கள். தடைபட்ட வேலைகளில் வேகம் கூடி நன்மை தரும். குடும்பச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களின் மனம் படிப்பில் ஈடுபடும்.

கும்பம்: இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்பதை விட நல்ல பலன்களைக் காண இருக்கிறீர்கள். ஆழ் மனதில் இருக்கும் போட்டி, பொறாமைகளை தவிர்த்து வெற்றியின் இலக்கை நோக்கி பயணிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சம நிலை நீடிக்கும். பழைய சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News