Job Alert: எழுதப் படிக்க தெரிந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை! கல்வித்தகுதி தேவையில்லை

Kailasa Recruitment: வெளிநாட்டு அரசு வேலைவாய்ப்பு... தமிழும், ஆங்கிலமும் தெரியுமா? வேலையைப் பிடி அருமையான வேலைகளை அள்ளித்தரும் கைலாசா தீவுநாடு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 19, 2022, 11:34 AM IST
  • வெளிநாட்டில் வேலை கிடைப்பது மிகவும் எளிது
  • எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்’
  • பயிற்சிக் காலத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்
Job Alert: எழுதப் படிக்க தெரிந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை! கல்வித்தகுதி தேவையில்லை title=

சென்னை: வெளிநாட்டில் வேலை பார்க்க விருப்பமா? உடனடியாக விண்ணப்பத்தை அனுப்புங்கள். கைலாசாத் தீவு நாட்டில் 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாட்டு அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என அந்த விளம்பரம் சொல்கிறது. வழக்கமான வேலைவாய்ப்பு விளம்பரங்களைவிட, இந்த ஆட்சேர்ப்பு விளம்பரம் சமூக ஊடகங்களில் பல நாட்களாக வைரலாகி வருகிறது.

அதற்குக் காரணம், இந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள நாடு கைலாசா, அதன் அதிபர் பச்சைத் தமிழரான நித்தியானந்தா என்பதும் தான். கர்நாடக மாநிலத்தின் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த இந்த சாமியாருக்கு சர்வதேச அளவில் பக்தர்கள் உண்டு. ஆனால், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, சாமியார் நித்தியானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குகள் பதிவானது.

மேலும் படிக்க | CM Stalin: ஃபீபா உலகக்கோப்பை மகுடம் சூடிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்

சர்ச்சை சாமியாராக உருவெடுத்த நித்தியானந்தா, கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில் நித்யானந்தா திடீரென்று மாயமாகினார். அதன்பிறகு சில நாட்களில் கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கியிருப்பதாக கூறப்பட்டது.

அந்த தீவு நாட்டிற்கு என, தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்புகளும், இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இஸ்லாமியர்களுக்கு மெக்கா போன்றும், கிறிஸ்தவர்களுக்கு வாடிகன் போலவும், இந்துக்களுக்கானது தான் இந்த கைலாசா என நித்தியானந்தாவின் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில், கைலாசாவில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் என்ற அறிவிப்பு வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது.

மேலும் படிக்க | Mrs World: மிஸஸ் வோர்ல்ட் பட்டம் வென்றார் இந்தியா! மகுடம் சூடிய அழகி சர்கம் கெளஷல்

இந்த விளம்பரத்தில், மொத்தம் 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும், கல்வி, மனித சேவைகள், சுகாதாரம், மதம் மற்றும் வழிபாட்டு தலங்கள், தகவல் மற்றும் ஒளிரப்பு, வேளாண்மை என அனைத்து அமைச்சகங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பயிற்சி 

இந்த பணிகளுக்கு தகுதிகளும் மிகவும் எளிமையானதாகவே உள்ளது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரிந்தால் போதும், கல்விச் சான்றிதழ்கள் எதுவும் தேவையில்லை.

மேலும் படிக்க | Safala Ekadashi: சஃபல ஏகாதசி விரதத்தால் தொட்டது துலங்கும்! காரியங்கள் வெற்றியடையும்

பணி நியமனம் செய்யப்பட்டால், ஓராண்டு கால பயிற்சி எடுத்துக் கொள்வது கட்டாயம் என்றும், பயிற்சிக் காலத்தில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

பெங்களூர், திருவண்ணாமலை, காசி, சேலம், ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் பயிற்சி வழங்கப்படும். ஓராண்டு கால பயிற்சிக்கு பிறகு தேர்வு செய்யப்படும் நபர்கள், தகுதிக்கேற்ப உலக அளவில் இருக்கும் கைலாசாவின் அலுவலகங்கலில் பணியமர்த்தப்படுவார்கள். 

இலவச உணவு; மருத்துவ பாதுகாப்பு 

இந்த பணியில் சேர்பவர்களுக்கு, பயிற்சிக் காலத்திலும் இலவச உணவு, இலவச மருத்துவ பாதுகாப்பு, குழந்தைகளுக்கு, இந்து கலாச்சாரபடி குருகுல கல்வி என அனைத்தும் இலவசம் என விளம்பரம் கூறுகிறது. இந்த வேலைவாய்ப்பு விளம்பரம் சமூக ஊடகங்களில் மட்டுமல்ல, பல தரப்பிலும் சர்ச்சைகளையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | FIFA World Cup Final 2022: கால்பந்து உலகக் கோப்பை தோல்வியால் பிரான்சில் வெடித்த கலவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News