ரயில் நிலையங்களில் 'செல்பி' எடுப்பவர்களிடம் இன்று முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
செல்போன்களில் உள்ள கேமராக்கள் மூலம் ரயில் பாலங்களில், ரயில் படிக்கட்டில் 'செல்பி' எடுக்கின்றனர். இதனால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்கும் விதமாக, ரயில் நிலையங்கள் தண்டவாளம், பிளாட்பாரங்கள், ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து 'செல்பி' எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே வாரியம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
அதன்படி, இன்று முதல் ரயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் 'செல்பி' எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.