காணாமல் போன இரண்டு மீட்டர் உயர Penis குறித்து ஜெர்மன் போலீசார் கவலை

பல மர்மங்கள் உலகில் என்றும் தொடர்பவை, உடாவில் உலோக தண்டவாளம் ஒன்று தானாகவே உருவாகி, திடீரென்று காணமல் போனது. அதேபோல, ஜெர்மனியில் ஆண்குறி வடிவில் அமைக்கப்பட்ட சிலை காணமல் போயிருக்கிறது. போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Written by - ZEE Bureau | Last Updated : Jan 20, 2021, 05:49 PM IST
  • மர்மமான விஷயங்கள் உலகில் அவ்வப்போது நடைபெறுகின்றன
  • உடாவில் உலோக தண்டவாளம் ஒன்று தானாக தோன்றி தானாகவே முளைத்தது
  • ஜெர்மனியில் ஆண்குறி மரச்சிலை திடீரென காணமல் போனது
காணாமல் போன இரண்டு மீட்டர் உயர Penis குறித்து ஜெர்மன் போலீசார் கவலை

நினைவுச்சின்னங்கள் காணாமல் போகும் மர்மம் மேலும் ஆழமடைந்துக் கொண்டே செல்கிறது. உட்டா-வின் (Utah) பாலைவனத்தில் ஒரு பளபளப்பான ஒற்றை தண்டவாளம் மர்மமான முறையில் காணாமல் போனது. ஆனால் அங்கிருந்து, வெகுதொலைவில் இருக்கும் ருமேனியாவில் இதேபோன்ற கட்டமைப்பு திடீரென தோன்றியது. அதேபோல, தீர்க்கப்படாத மற்றொரு மர்மம் தொடர்பாக் ஜெர்மனி கவலையடைந்துள்ளது.

ஆண்குறி வடிவத்தில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு மாபெரும் சிற்பம் "மர்மமான முறையில் காணாமல் போனது". அது தொடர்பாக ஜெர்மனி காவல்துறை அதிகாரிகள் (Police) விசாரணை தொடங்கியுள்ளனர்.

தெற்கு ஜெர்மனியின் பவேரியா-வில் (Bavaria) மலை உச்சியில் பிரம்மாண்டமான ஆண்குறி சிற்பம் நிறுவப்பட்டது. அது மரத்தாலானது. அதைத்தான் இப்போது காணவில்லை.  அங்கு தற்போது, ஒரு ஸ்டம்ப் மற்றும் மரத்தூள்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அதில் மர்மான விஷயம் என்னவென்றால், ஆண்குறி (Penis) சிற்பம் திடீரென காணாமல் போனதைப் போலவே, இரண்டு மீட்டர் உயரமுள்ள மிகப்பெரிய ஆண்குறி சிற்பம் "பல ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் தோன்றியது" என்று ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. எந்தவொரு கலைஞரும் இதை உருவாக்கியதாகக் தெரியவில்லை என்றும் அந்த பத்திரிகை தெரிவிக்கிறது. 

தானாகவே உருவாகிய Penis சிற்பம், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தானாகவே மறைந்தால் அது ஆச்சரியம் மட்டுமல்ல, கவலையும் தருகிறது. இந்த ஆண்குறிக்கு உத்தியோகபூர்வ பெயரும் இல்லை என்றாலும்,  "ஹோல்ஸ்பெனிஸ்" ("the Holzpenis") என்று அழைக்கப்பட்டது.

Also Read | Jallikattu காளைகளுடன் போட்டி போடுகிறதா பன்றி பிடி? காரணம் என்ன?

இது மிகவும் பிரபலமானது என்றும், உள்ளூர் அடையாளமாக மாற்விட்டது என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல, இந்த ஆண்குறியை பார்க்க பெருமளவில் மக்கள் கூட்டம் குவிந்தது என்றும், மலையேறுபவர்களுக்கான இடமாகவும் மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வளவு பிரபலமான ஆணுறுப்பு வடிவ மரச்சிலை மர்மமான முறையில் காணாமல் போன வழக்கை ஜெர்மனி (German) காவல்துறை விசாரிக்கத் தொடங்கிவிட்டது. இதில் ஏதேனும் கிரிமினல் குற்றம் நடந்திருக்கிறதா என்பது அவர்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. 

Also Read | Joe Biden பதவியேற்கும் நாளில் 4 விண்கற்கள் பூமியின் பாதையில் வருகிறதா? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

More Stories

Trending News