Joe Biden பதவியேற்கும் நாளில் 4 விண்கற்கள் பூமியின் பாதையில் வருகிறதா?

அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்கும் நாளில் நான்கு விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2021, 08:07 PM IST
  • Joe Biden பதவியேற்கும் நாளில் 4 விண்கற்கள் பூமியின் பாதைக்க்கு வருகிறது
  • டிரம்பின் ஆதரவாளர்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பூமியில் கலவரத்தை தூண்டுவார்களா?
  • விண்வெளியில் இருந்து சிக்கலை டொனால்ட் தூண்டுகிறாரா?
Joe Biden பதவியேற்கும் நாளில் 4 விண்கற்கள் பூமியின் பாதையில் வருகிறதா? title=

அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்கும் நாளில் நான்கு விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 20ம் நாளன்று, ஜோ பிடன் (Joe Biden) அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். பதவியில் இருந்து வெளியேறும் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) ஆதரவாளர்கள் மற்றும் கலவரக்காரர்களைத் தவிர, விண்வெளிப் பொருள்களும் (celestial objects) ஜோ பைடனின் பதவியேற்புக்கு ஊறு விளைவிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  

அடுத்த சில நாட்களில், தொடர்ச்சியான சிறுகோள்கள் பூமியைத் (Earth) தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், ஒரு சிறுகோள் (asteroid) மணி நேரத்திற்கு 46,000 கிலோமீட்டர் (29,000 மைல்) என்ற வேகத்தில் நமது கிரகத்தை நோக்கி பயணித்து வந்து கொண்டிருக்கிறது.  

ஆனால் பூமிக்கு அருகில் வரும் பொருட்களை ஆய்வு செய்யும் நாசாவின் மையம் (NASA’s Center for Near Earth Object Studies), வரவிருக்கும் நாட்களில் ஒரு சில விண்கற்கள் பூமிக்கு அருகில் இருக்கும் என்றும், தொடக்க நாளில் மட்டும் இதுபோன்ற நான்கு சிறுகோள்கள் நமது கிரகத்துடனான பாதைகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறது.

Also Read | வன்முறை பதட்டங்களுக்கு மத்தியில் Jo Biden பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் America

இதுவரை, சிறுகோள்கள் நமது கிரகத்தின் திசையில் அல்ல, பாதுகாப்பான திசையில் பயணிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் நான்கு சிறுகோள்கள் பூமியை நோக்கி பயணிப்பதாக சொல்லும் நாசாவின் கருத்து அனைவருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூமிக்கு மிகவும் நெருக்கமான சிறுகோள் “2021 BK1” பூமியை கடக்கும் போது, அதற்கும் நமது கிரகத்திற்கும் இடையிலான தொலைவு என்பது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரமாக இருக்கும். பூமிக்குச் நோக்கி வரும்  சிறுகோள்களின் குழுவின் ஒன்றின் அகலம் 93 மீட்டர் என்றால் அதன் பிரம்மாண்டத்தை நினைத்துப் பாருங்கள்!

டிரம்ப்புக்கு வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு இருக்கிறதா?

முன்னதாக, முன்னாள் இஸ்ரேலிய விண்வெளி ஏஜென்சி தலைவர் ஹைம் எஷெட் (Haim Eshed) வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் ஒரு அண்ட கூட்டமைப்பு (Galactic Federation) ஒன்றில் இணைந்து இருப்பதாகக் கூறி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். டிரம்ப் நிர்வாகம் இந்த கூட்டமைப்பின் ஒரு பகுதி என்றும் அவர் கூறி பீதியை கிளப்பியிருந்தார்.  
 
"மனிதர்கள் (human) தயாராக இல்லை" என்பதால் வேற்றுகிரகவாசிகள் ரகசியமாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.  1981 முதல் 2010 வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புத் திட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹைம் எஷெட் (Haim Eshed), “வேற்றுகிரகவாசிகள் இருப்பதை டிரம்ப் (Donald Trump) வெளிப்படுத்த நினைத்தார். ஆனால் கேலடிக் கூட்டமைப்பில் உள்ள வேற்றுகிரகவாசிகள் (Aliens), 'காத்திருங்கள், மக்கள் முதலில் அமைதியாக இருக்கட்டும்' என்று கூறுகிறார்கள்” என்று ஹைம் எஷெட் தெரிவித்திருந்தார்.

Also Read | Aliens: வேற்றுகிரகவாசிகள் தலைமறைவாக இருப்பதாக ex-Israeli general பகீர் தகவல்

வேற்றுகிரகவாசிகள் (Aliens) தங்கள் நகர்வுகளை மூடிமறைக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என்று கூறும் எஷெட், வேற்று கிரகவாதிகள் சமாதானமாக இருக்க விரும்புகிறார்கள் என்றும் தெரிவிக்கிறார். "மனிதகுலம் மேம்பட்டு, விண்வெளி மற்றும் விண்கலங்கள் என்ன என்பதை அவற்றை இயல்பாக புரிந்துகொள்ளும் கட்டத்தை அடைவதற்காக ஏலியன்கள் காத்திருக்கிறார்கள்" என்று எஷெட் கூறினார்.

“அமெரிக்க அரசாங்கத்திற்கும் வெளிகிரகவாசிகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது. இங்கே சோதனைகள் செய்ய அவர்கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவர்களும், பிரபஞ்சம் முழுவதையும் ஆராய்ச்சி செய்து புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர், மேலும் அவர்கள் நமக்கு உதவி செய்ய விரும்புகிறார்கள். செவ்வாய் கிரகத்தின் (Mars) ஆழத்தில் ஒரு நிலத்தடி தளம் உள்ளது, அவற்றுக்கென பிரதிநிதிகள் இருக்கிறார்கள், அமெரிக்க விண்வெளி வீரர்களும் அங்கு இருக்கின்றனர்” என்று எஷெட் கூறினார்.

ஆனால் தற்போது பதவியில் இருந்து விலகுவதையும், ஜோ பைடன் அதிபராவதையும் ஏற்றுக் கொள்ள முடியாத டிரம்ப் வேற்றுகிரகவாசிகள் மூலம் சிக்கலை ஏற்படுத்துவாரா என்ற கவலைகள் எழுந்துள்ளன.
 
வேற்று கிரகவாசிகள் இருப்பதாக முன்னாள் இஸ்ரேலிய விண்வெளி ஏஜென்சி தலைவர் ஹைம் எஷெட் (Haim Eshed) கூறும் கருத்துக்கள் வினோதமானவை என்று பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதுமட்டுமல்ல, ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே வார்த்தைகளை அவர் கூறியிருந்தால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் கடிந்துக் கொள்கின்றனர். இந்த சாத்தியத்தை ஒப்புக் கொள்ளும் ஹைம் எஷெட், அதனால் தான் தற்போது உண்மையை சொல்வதாக கூறுகிறார்.  

Also Read | Climate Change: சஹாரா பாலைவனத்தை அச்சுறுத்தும் பனிப் போர்வை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News