புதுடெல்லி: ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமானது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, சீறி எழுந்த மக்கள், மெரீனா கடற்கரையில் நடத்திய போராட்டம் பாரம்பரிய வீர விளையாட்டுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியைப் போல தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ”பன்றி பிடி” போட்டி நடத்தப்பட்டு அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு (Jallikattu) போட்டி நடைபெறுவது வழக்கம். காளைகளை அடக்கும் காளையர்களுக்கு வெற்றி பரிசுகள் வழங்கப்படும். அதேபோல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பன்றியை பிடிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
பன்றியை பிடித்து தனது வீரத்தை நிரூபிக்கும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்படி வினோதமாக நடைபெறும் பன்றிபிடி போட்டி பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
Also Read | பார்த்து மகிழுங்கள் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் (Coronavirus) பரவலை முன்னிட்டு பல கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கொரோனா (Corona Test) பரிசோதனை செய்யப்பட்டது. பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு, காளைகள் அணையப்பட்டன.
வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்குவார்கள். அதேபோல், பன்றிகளும் ஒரு பட்டியில் இருந்து திறந்துவிடப்படும். ஜல்லிக்கட்டில் மாடுகளின் திமிலைப் பிடித்து அடக்கவேண்டும் என்பதுபோல, பன்றி பிடிப் போட்டியில், பன்றியை பின்னங்கால்கலில் பிடித்து நிறுத்தவேண்டும். பன்றியின் பின்னங்காலை பிடிக்கும் போது அது தன்னை பிடித்தவர்களையும் சேர்த்து இழுத்துச் செல்லும். பன்றியை பிடித்து நிறுத்துபவர்கள் வெற்றியாளர்கள. பன்றியை பிடித்து நிறுத்துவதும் கடினம்.
Also Read | Egypt: வரலாற்றை திருத்தி எழுதும் எகிப்தின் புதிய தொல்பொருள் கண்டுபிடிப்பு
ஜல்லிக்கட்டுக்கு இருப்பதைப் போலவே இதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன 70 முதல் 80 கிலோ எடை உள்ள பன்றிகள் தான் போட்டியில் கலந்துக் கொள்ள முடியும். பன்றி அணையும் போட்டிகளில் தேனி, மதுரை (Madurai), திண்டுக்கல் உட்பட பல பகுதிகளை சேர்ந்த பன்றிகள் கலந்துக் கொண்டன.
விவசாயத்திற்கு மாடுகள் பயன்படுத்தப்படுவது பொலவே, சங்க காலத்தில் பன்றிகள் தான் பயன்படுத்தப்பட்டன என்று மதுரை வட்டார மக்கள் கூறுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் சங்ககால பாடல்களில் இருப்பதாக சான்றுகளையும் அவர்கள் எடுத்து வைக்கின்றனர்.
இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல பண்ணைகளிலும் வீடுகளிலும் பன்றிகள் வளர்க்கப் படுகின்றன. பன்றியின் முடி தூரிகை செய்யப் பயன்படுகின்றது.
பன்றிகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் தான், அவை நீருக்குள் இருப்பதை விரும்புகின்றன. சேற்றைப் பூசிக்கொண்டு உடலை குளிர்வித்துக் கொள்கின்றன. வெறும் நீரை விட, சேற்றையோ, அழுக்கான தண்ணீரில் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? சூரிய வெப்பம் மற்றும் பூச்சிகளிடம் காத்துக்கொள்ளவு அரணாக ஒரு படலமாக சேறு உதவுகிறது.
Also Read | WORLD'S DIRTIEST மனிதன்! 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா?
பன்றிகள் அறிவுக்கூர்மை உள்ள விலங்குகளாகக் கருதப்படுகின்றன. நாய், பூனைகளை விட இவற்றை எளிதில் பழக்க முடியும் என்பதால் பன்றிகள் செல்ல விலங்குகளாகவும் வளர்க்கப்படுகின்றன.
மனிதர்கள் கழிவாக நினைக்கும் பொருட்களே பன்றிகளுக்கு உணவு. பசுந்தீவனம், தானியங்களின் கழிவு, இறைச்சிக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், அழுகிய பொருட்கள் ஆகியவற்றை உண்கின்றன. பன்றிகளின் சாணம் மண்ணின் தன்மையினைப் பாதுகாக்கும் உரமாக பயன்படுகிறது.
இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படுவதற்கான காரணம் தெரியுமா? பன்றிகள் வேகமாக வளரும் தன்மையுடையன. ஒரே சமயத்தில் 12 குட்டிகளை பெற்றெடுக்கும் திறன் படைத்தவை பன்றிகள். இறைச்சிக்காக வெட்டும் போது சராசரியாக அவற்றின் உயிர் எடையில் 60-80 சதவிகித இறைச்சி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
Also Read | Wheelchairஇல் 250 மீட்டர் உயர கட்டடத்தில் ஏறி சாதனை படைத்த Lai Chi-wai
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR