உலகளாவிய வேர்ல்டு வைடு முதன்மையான வலைதளமாக விளங்கும் கூகுள் நிறுவனம், இதனை கௌரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்றைக்கு நாம் பயன்படுத்துகின்ற இணையத்தை அனுக உலகளாவிய வலை எனப்படுகின்ற உலகளாவிய வேர்ல்டு வைடு வெப்க்கு 30 வயதாகின்றது.
ஓர் வலை உலாவியைக் கொண்டு உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பல்லூடகக் கூறுகளைக் கொண்டுள்ள வலைப் பக்கங்களைக் காணவும், மிகை இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். முன்னாளில் இருந்த மீயுரை முறைமைகளைப் பயன்படுத்தி, 1989 ஆம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் தற்போதைய இயக்குநருமான சர் டிம் பெர்னெர்ஸ்-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார். இவர் சமர்பித்த தினத்தை இணையத்தின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகின்றது.
இன்றைக்கு உலகயளவில் சுமார் 2 பில்லியனுக்கு அதிகமான இணையதளங்கள் செயற்பாட்டில் உள்ளன. புதிய தலைமுறையினரின் ஒவ்வொரு தேவைக்கும் , அதாவது இமெயில், கேம், செய்திகள், வீடியோ மேலும பல., என அனைத்திற்கும் வலைதளங்கள் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன.
இந்நிலையில் இன்றைக்கு இணையத்தில் முதன்மையான வலைதளமாக விளங்கும் கூகுள் நிறுவனம், இதனை கௌரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.