முட்டையை இதோடு கலந்து தேய்த்தால் முடி பளபளப்பாகும் - பொலிவாகும் வறண்ட முடி..!

Hair care, Lifestyle Tips : முடியை சரியாக பராமரிக்காதது, ஊட்டச்சத்து குறைபாடு காரணங்களால் முடி அதனை பொலிவை இழந்து வறண்டு போகிறது. இதற்கு முட்டை மூலம் தயாரிக்கும் இந்த பசையை பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 29, 2024, 06:04 AM IST
  • முடி ஆரோக்கியமாக இருக்க டிப்ஸ்
  • பளபளப்பான கூந்தலுக்கு முட்டை ஹேர் மாஸ்க்
  • முட்டை ஹேர் மாஸ்க் செய்யும் வழிமுறை
முட்டையை இதோடு கலந்து தேய்த்தால் முடி பளபளப்பாகும் - பொலிவாகும் வறண்ட முடி..! title=

Hair care, Lifestyle Tips : பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் தலைமுடி பட்டுப் போலவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக முடி நீளமாக இருக்கும் பெண்கள், பளபளப்பு குறையவே கூடாது என நினைக்கிறார்கள். ஆனால், தூசி, மண், சூரிய ஒளி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வெப்ப கருவிகளை பயன்படுத்துவது முடி வறட்சியை ஏற்படுத்துகின்றன. இதனால் முடி உதிர தொடங்குகிறது. இதற்கு நீங்கள் முடிவுரை எழுத வேண்டும் என நினைத்தால் முட்டை மூலம் தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்கை உருவாக்கி பயன்படுத்தி பாருங்கள். 

முட்டை ஹேர் மாஸ்க் தயார் செய்வது எப்படி?

ஆரோக்கியம், அழகு என இரண்டையும் பராமரிக்கும் ஆற்றல் முட்டையில் உள்ளது. அத்தகைய முட்டையை ஹேர் மாஸ்க்காக தயார் செய்து கூந்தலில் தடவுவதால், முடி உடைவது அல்லது உதிர்வது தடுக்கப்பட்டு, முடி வலுவடைந்து, முடி அழகாக இருக்கும். இந்த ஹேர் மாஸ்கை எப்படி தயாரிக்க வேண்டும் என்றால், ஒரு முட்டையை எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்தாலே, உங்கள் ஹேர் மாஸ்க் தயார். இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் தடவி 20 முதல் 30 நிமிடம் கழித்து தலையை கழுவி சுத்தம் செய்யவும். இது முடியின் வறட்சியை நீக்கி, கூந்தலுக்கு பொலிவை சேர்க்கிறது.

மேலும் படிக்க | 63 வயதிலும் இளமையாக இருப்பது எப்படி...? பிரபல பாலிவுட் நடிகர் சொல்லும் சீக்ரெட்

முட்டை மூலம் தயாரிக்கப்படும் மற்ற ஹேர் மாஸ்க் :  

* முட்டையை முடியில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். முட்டையில் தயிர் கலந்து ஹேர் மாஸ்க் செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க்கை உருவாக்க, அரை கிண்ணம் தயிரில் ஒரு முட்டையை சேர்க்கவும், விரும்பினால், அதில் சிறிது தேன் சேர்க்கவும். நன்கு கலந்து, இந்த ஹேர் மாஸ்க்கை சற்று ஈரமான கூந்தலில் தடவி, 20-25 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் தலையைக் கழுவவும். முடி பொலிவு பெறும்.

* இதேபோல், முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெயைக் கலந்து தடவினாலும் முடி பளபளப்பாகும். ஹேர் மாஸ்க் செய்ய, ஒரு முட்டையில் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து, அதைக் கலந்து முடியில் அரை மணி நேரம் வைத்திருந்து பின் தலையைக் கழுவ வேண்டும்.

* ஒரு முட்டை, ஒரு வாழைப்பழம், 3 முதல் 4 ஸ்பூன் பால், சிறிது ஆலிவ் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து ஹேர் மாஸ்க் தயார் செய்யவும். இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் அரை மணி நேரம் வைத்திருந்து பின் தலையை கழுவ வேண்டும். இதனை செய்தால் கூந்தல் வறட்சி நீங்கும். முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க | கோஹினூர் வைரம் போல் உங்களை பளபளவென மினுமினுக்க வைக்கும் மந்திர பானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News