பணத்தை மிச்சப்படுத்தணுமா? இல்லத்தரசிகளுக்கு எளிய குறிப்புகள்!

Money Saving Tips: தற்போதுள்ள சூழ்நிலையில் பணத்தை மிச்சப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. சேமிப்பு பலரது வாழ்க்கையிலும் இல்லாமல் போய் விட்டது.  

Written by - RK Spark | Last Updated : Oct 27, 2023, 01:15 PM IST
  • சேமிப்பது குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
  • இல்லத்தரசிகள் குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
  • சேமிப்பு கடன் வாங்குவதை கட்டுப்படுத்த உதவுகிறது.
பணத்தை மிச்சப்படுத்தணுமா? இல்லத்தரசிகளுக்கு எளிய குறிப்புகள்! title=

Money Saving Tips: குடும்ப வரவுசெலவை திறமையாக நிர்வகிப்பது, செலவை குறைப்பதற்கும் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கும் முக்கியமானது. பணத்தை சேமிப்பது இல்லத்தரசிகளுக்கு முக்கியமான ஒரு வேலை. ஆடம்பர செலவை குறைத்து, எப்படி மிச்சப்படுத்துவது என்பது அவர்களுக்கு கைவந்த கலை.  இது ஒரு குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது. கூடுதல் வருமானத்திற்கு இன்னொரு வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, வரும் வருமானத்தை நல்ல முறையில் சேமித்து வைத்தாலே போதுமானது.  இல்லத்தரசிகள் தங்கள் குடும்பத்தின் நிதியை அதிகம் செலவாகாமல் சேமித்து வைக்க எளிய குறிப்புகள்.

பட்ஜெட்டை தயார் செய்யுங்கள்: உங்கள் மாத வருமானம் மற்றும் செலவுகளை கணக்கிட தெளிவான பட்ஜெட்டை உருவாக்கவும். பில்கள், மளிகை பொருட்கள், போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் உட்பட உங்கள் செலவினங்களை வகைப்படுத்தவும். ஒரு பட்ஜெட்டை வைத்திருப்பது உங்கள் நிதி நிலைமையின் அளவை தெளிவாக காட்டும் மற்றும் தேவையற்ற செலவுகளை குறைக்க உதவும்.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டும்: வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ, குஷியில் கஸ்டமர்ஸ்

மளிகை பொருட்கள்: என்ன சாப்பிடப்போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது மளிகை சாமான்களில் பணத்தை சேமிக்க ஒரு சிறந்த வழியாகும். வாராந்திர உணவு பட்டியலை உருவாக்கி, அதில் இருந்து ஷாப்பிங்கில் என்ன என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.  பொருட்கள் வாங்கும் பொது மொத்தமாக வாங்கவும். இது செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்தவும். மேலும் தேவையில்லாத பொருட்கள் வாங்குவதை கட்டுப்படுத்தும்.

கூப்பன் மற்றும் கேஷ்பேக்: மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை வாங்கும்போது கூப்பன்கள், தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பல கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் நீண்ட காலத்திற்கு பணத்தைச் சேமிக்க உதவும் திட்டங்களை வழங்குகின்றன. கேஷ்பேக் ஆப்ஸ் மற்றும் இணையதளங்களைப் பயன்படுத்துவது கூடுதல் சேமிப்பை வழங்கலாம்.

செலவுகளைக் குறைக்கவும்: உங்கள் பயன்பாட்டு நுகர்வு குறித்து கவனமாக இருங்கள். எலெக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றைத் ஆப் செய்யவும். ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மிசின் பயன்பாட்டை தேவைக்கேற்ப பயன்படுத்தவும்.  கரண்ட் பில்லை குறைப்பது சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.  

வீட்டு வேலை: முடிந்தவரை வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளை நீங்கள் முடிக்க பாருங்கள். வீட்டில் பழுதுபார்த்தல், தையல், தோட்ட வேலைகள் அல்லது இதர வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் வைத்து பார்க்காமல் நீங்கள் செய்து பழகுங்கள்.  இப்படி செய்வது வீண் செலவுகளை குறைப்பது மட்டும் இல்லாமல், உங்கள் ஆற்றல்களையும் அதிகப்படுத்துகிறது. மேலும் பணத்தைச் சேமிப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழியாகவும் உள்ளது.

பொருட்கள் வாங்கும் போது: புது டிரஸ் அல்லது பிற அத்தியாவசியமற்ற பொருட்களை வாங்கும் போது சில விஷயங்களை பார்த்து வாங்குங்கள்.  குறிப்பாக பல கடைகளுக்கு சென்று விலையை பார்த்து வாங்குங்கள்.  தற்போது ஆன்லைனில் பல வீட்டு உபயோக பொருட்களுக்கு நல்ல ஆபர்கள் கிடைக்கின்றன.  ஷாப்பிங் செய்யும் முன்பு, ஆன்லைனில் விலைகளை ஒப்பிட்டு பார்த்து வாங்குங்கள்.

சேமிப்பு: அவசர காலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கி கொள்ளுங்கள்.  ஏனெனில் அது உண்மையிலேயே உங்களுக்கு உதவுகிறது. மருத்துவக் கட்டணம் அல்லது வீட்டுப் பழுதுபார்ப்பு போன்ற எதிர்பாராத செலவினங்களுக்காக சேமிப்பை ஒதுக்கி வைப்பது கடன் வாங்குவதையோ, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதையோ தடுக்கலாம்.

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News