December 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள்: உங்களுக்கு நேரடி தாக்கம் ஏற்படும்

இன்று முதல் அதாவது டிசம்பர் முதல் தேதியில் இருந்து வங்கி, சேமிப்பு கணக்கில் கொடுக்கப்பட்ட வட்டியை குறைத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 11:46 AM IST
  • பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
  • டிசம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • கிரெடிட் கார்டு மூலம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி வரும்.
December 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள்: உங்களுக்கு நேரடி தாக்கம் ஏற்படும் title=

1 December Rule Change: இன்று முதல் 2021 ஆம் ஆண்டின் கடைசி மாதம் அதாவது டிசம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இன்று முதல் வங்கி, தனிநபர் நிதி உள்ளிட்ட பல துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் நேரடி நிதி பரிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன. அனைவரும் இந்த மாற்றங்களைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம், இல்லையெனில் நீங்கள் சில சிக்கல்களில் மாட்டிக்கொள்ளலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம்

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இன்று முதல் அதாவது டிசம்பர் முதல் தேதியில் இருந்து வங்கி, சேமிப்பு கணக்கில் கொடுக்கப்பட்ட வட்டியை குறைத்துள்ளது. வங்கி, சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 2.90 சதவீதத்தில் இருந்து 2.80 சதவீதமாகக் குறைத்துள்ளது.

வணிக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்தது

இன்று அதாவது டிசம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர்களின் (LPG Cylinder) விலையை மதிப்பாய்வு செய்கின்றன. இருப்பினும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு கட்டணம் அதிகரித்துள்ளது

நீங்கள் எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளராக இருந்து, எஸ்பிஐ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு அதிர்ச்சியான செய்தி உள்ளது. இன்று முதல் நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி வரும். இப்போது கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், செயலாக்கக் கட்டணமாக ரூ.99 தனி வரி செலுத்த வேண்டும்.

ஆதாருடன் UAN இணைக்கப்படவில்லை என்றால்.....

யுனிவர்சல் அக்கவுன்ட் எண்ணை (UAN) உங்கள் ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். அதாவது நவம்பர் 30 ஆம் தேதிக்குள் யாராவது இந்தப் பணியைச் செய்திருக்கவில்லை என்றால் இன்றிலிருந்து அந்த நிறுவனத்தில் இருந்து வரும் பங்களிப்பில் சிக்கல் ஏற்படலாம். இது தவிர, EPF கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவும் முடியாது.

ALSO READ:சிலிண்டர் விலை உயர்வு; மக்கள் வயிற்றில் மீண்டும் அடி 

14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் மற்றொரு பின்னடைவை சந்தித்துள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் தீப்பெட்டியின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இன்று முதல் 1 ரூபாய்க்கு கிடைக்கும் தீப்பெட்டி 2 ரூபாய்க்கு கிடைக்கும். கடைசியாக 2007ல் தீப்பெட்டிகளின் விலை உயர்த்தப்பட்டது. தீப்பெட்டி தயாரிக்கும் மூலப்பொருளின் விலை அதிகரித்துள்ளதால், தீப்பெட்டியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்ந்துள்ளன

ஜியோ (Jio) தனது கட்டணத் திட்டங்களின் விலையை இன்று முதல் உயர்த்தியுள்ளது. டிசம்பர் 1 முதல் ஜியோவின் ரூ.75 திட்டத்திற்கு ரூ.91 செலுத்த வேண்டும். அதே போல், ரூ.129 திட்டத்துக்கு இப்போது ரூ.155 செலுத்த வேண்டும். இது தவிர, ரூ.399-க்கு ரூ. 479, ரூ.1,299 திட்டத்துக்கு ரூ. 1559 மற்றும் ரூ.2,399 திட்டத்துக்கு ரூ.2,879 செலுத்த வேண்டும்.

டேட்டா டாப்-அப் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது 6 ஜிபி டேட்டாவுக்கு ரூ.61, 12 ஜிபிக்கு ரூ.121 மற்றும் 50 ஜிபிக்கு ரூ.251-க்கு பதிலாக ரூ.301 செலுத்த வேண்டும்.

டிவி விலை அதிகமாகியுள்ளது

இன்றிலிருந்து டிவி பார்ப்பதும் விலை அதிகமாகிவிட்டது. இன்று முதல் நீங்கள் DTH ரீசார்ஜ் செய்வதற்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஸ்டார் பிளஸ், கலர்ஸ், சோனி மற்றும் ஜீ போன்ற சேனல்களுக்கு, 35 முதல் 50% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். சோனி சேனலுக்கு ரூ. 39க்கு பதிலாக, ரூ.71 செலுத்த வேண்டும். ZEE சேனலுக்கு 39 ரூபாய்க்கு பதிலாக, மாதம் 49 ரூபாய், Viacom18 சேனல்களுக்கு 25 ரூபாய்க்கு பதிலாக 39 ரூபாய் செலுத்த வேண்டும்.

ALSO READ:SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி; இனி கூடுதலா பணம் கட்டணும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News