ஏர்டெல், வோடாஃபோனை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய ஜியோ!

ஏர்டெல் மற்றும் வோடஃபோன் பயனாளர்களை கிண்டலடித்து கொண்டிருந்த ஜியோ பயனாளர்களுக்கு ஜியோ நிறுவனமும் தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 28, 2021, 09:53 PM IST
ஏர்டெல், வோடாஃபோனை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய ஜியோ!

ஒவ்வொரு நெட்வொர்க் நிறுவனங்களும் தனது பயனாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.  அந்த வகையில் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் பயனாளர்களுக்கு அதிரடி ஆஃபர்களை போட்டி போட்டு கொண்டு வழங்கி கொண்டிருந்தது.

இந்நிலையில் திடீரென்று முன்னணி நிறுவனமான ஏர்டெல் சில நாட்களுக்கு முன்னர் போஸ்ட்பெய்டு விலையை உயர்த்தியதை தொடர்ந்து தற்போது தனது ப்ரீபெய்டு திட்டங்களை 25% சதவீதம் உயர்த்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதன் மூலம் ரூ.149 ரீசார்ஜ் திட்டமானது ரூ.179 என்று உயர்ந்துள்ளது.  இந்த நன்மை மற்றும் 1 ஜிபி டேட்டாவுடன் ரூ.219 என்று இருந்த திட்டம் தற்போது ரூ.265 ஆக உயர்ந்துள்ளது.  இந்த திட்டம் இம்மாதம் 26-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பும் வெளியானது.

 

இதனை தொடர்ந்து வோடஃபோன் நிறுவனமும் தனது பங்கிற்கு ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியது.  அதன்படி ரூ.79 என்று இருந்த திட்டம் உயர்ந்து ரூ.99 ஆக உயர்ந்துள்ளது.  அதேபோல் ரூ.149 என்று இருந்த ரீசார்ஜ் திட்டமானது ரூ.179 ஆக உயர்ந்தது.  

 

அதனையடுத்து ஏர்டெல் மற்றும் வோடஃபோன் பயனாளர்களை கிண்டலடித்து கொண்டிருந்த ஜியோ பயனாளர்களுக்கு ஜியோ நிறுவனமும் தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் அதிர்ச்சியை அளித்துள்ளது.  ரூ.129 என்று இருந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.155 என்று மாறியுள்ளது.  மேலும் ரூ.149 ஆக இருந்த திட்டம் ரூ.179 ஆகா உயர்ந்துள்ளது.  இது போன்ற பல திட்டங்களுக்கு ஜியோ விலையை ஏற்றியுள்ளது.   ஜியோ நிறுவனம் தனது பயனாளர்களுக்கு அதிகளவிலான புது புது சலுகைகளை வழங்கிய நிலையில், தற்போது அறிவித்துள்ள விலையேற்றம் அனைவரிடமும் கவலையை அளித்துள்ளது.

ALSO READ Airtel பம்பர் Offer; இந்த ப்ரீபெய்டு திட்டங்களில் தினமும் இலவச டேட்டா கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News