இபிஎஃப் கணக்கில் உங்கள் பணம்: நீங்கள் எனதேனும் நிறுவத்தில் வேலையில் செய்துக் கொண்டு இருந்தால், உங்கள் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பணத்தை நிறுவனம் கண்டிப்பாகக் கழிக்கும். இந்த பணம் உங்களின் ஓய்வூதியத்திற்கு மிக முக்கியமான சொத்து ஆகும். நிறுவனம் உங்கள் சம்பளத்தில் இருந்து பிஎப் போடுவதற்கான தொகையை கழித்துக்கொள்கிறது. அதேபோல், உங்கள் பிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கிறது.
PF இல் உள்ள பணம் ஒரு நிலையான விதியின்படி கழிக்கப்படுகிறது. இது உங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏவில் 12 சதவீதம் ஆகும். இது தவிர, நிறுவனமும் தங்கள் தரப்பில் இருந்து 12 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. உங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பணத்திற்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆண்டு அடிப்படையில் வட்டி செலுத்துகிறது.
மேலும் படிக்க | வட்டியை அள்ளித்தரும் வங்கிகள்.. மூத்த குடிமக்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட்
நிறுவனம் டெபாசிட் செய்த தொகையில், 3.67 சதவீதம் உங்கள் பிஏபி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது, மீதமுள்ள 8.33 சதவீதம் உங்கள் பென்ஷன் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் உங்கள் நிறுவனம் உங்கள் PF பணத்தை EPFO இல் ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்கிறதா? இதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இல்லையெனில், உங்களுக்கு பின்னர் சிக்கல்கள் ஏற்படலாம்.
பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா என்பதை செக் செய்யவும்:
நிறுவனம் உங்கள் கணக்கில் PF பணத்தை டெபாசிட் செய்கிறதா இல்லையா என்பதை அறிய, உங்கள் EPFO பாஸ்புக்கை நீங்கள் சரிபார்க்க வேண்டும். ஆனால், இதற்கு உங்கள் UAN செயலில் இருக்க வேண்டும்.
இந்நிலையில் உங்கள் PF கணக்கு இருப்பைச் சரிபார்க்க, முதலில் EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.epfindia.gov.in/ க்குச் செல்லவும். இங்கே மேலே 'Our Services' என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். இந்த விருப்பத்தை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, இங்கிருந்து 'for employees' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கிருந்து, 'member passbook' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் UAN எண் மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளிடவும். உங்கள் கணக்கில் உள்நுழைந்த பிறகு, பாஸ்புக் விருப்பம் தோன்றும். அங்கு கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் EPF இருப்பை இங்கே சரிப்பார்க்கலாம். இங்கே, PF கணக்கு இருப்பு, அனைத்து டெபாசிட்களின் விவரங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை ஒரே கிளிக்கில் நீங்கள் பெறலாம்.
UMANG செயலி மூலம் இந்த வகையில் செக் செய்யலாம்:
UMANG செயலி பல அரசு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. அதன்படி முதலில் EPF கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா என்பதை தெரிந்துக்கொள்ள Google Play Store அல்லது Apple App Store இலிருந்து UMANG செயலியை பதிவிறக்கவும். அதன்பிறகு உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். பின்னர், "அனைத்து சேவைகள்" டேபின் கீழ், 'EPFO' ஐத் சர்ச் செய்யவும். 'பணியாளர் மைய சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ‘பாஸ்புக்கைக் காண்க’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட UAN மற்றும் OTP ஐ உள்ளிடவும். இதில் லாக் இன் செய்தவுடன் நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் EPF இருப்பைக் காணலாம்.
மேலும் படிக்க | வங்கிக்கணக்கு இருக்கா? அப்போ உடனே ஆதார் கார்டில் இதை முடிச்சிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ