இந்திய ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு. வடகிழக்கு ரயில்வே ஆட்செர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 05.07.2022 கடைசி தேதி ஆகும்.
1) நிறுவனம் :
நார்த் ஈஸ்டர்ன் ரயில்வே, ஆர்ஆர்சி
2) காலி பணியிடங்கள் :
20
மேலும் படிக்க | பி.இ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு
3) பணிகள் :
ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் - 15
ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (எலக்ட்ரிகல்/டிஆர்டி - 02
ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (சிக்னல்) - 03
4) கல்வி தகுதிகள் :
- ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பதவிக்கு விண்ணப்பதாரர் மூன்று வருட சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது மூன்று வருட கால சிவில் இன்ஜினியரிங் பி.எஸ்சி. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனம் அல்லது சிவில் இன்ஜினியரிங் அடிப்படை ஸ்ட்ரீம்களின் ஏதேனும் ஒரு துணை அல்லது நான்கு வருட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.'
- ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (எலக்ட்ரிகல்/டிஆர்டி) பதவிக்கு மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மூன்றாண்டு டிப்ளமோ அல்லது மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு படிப்பை படித்திருக்க வேண்டும்.
- ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (சிக்னல்) பதவிக்கு எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / இன்பர்மேஷன் டெக்னாலஜி / கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / இன்பர்மேஷன் டெக்னாலஜி / கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனம் அல்லது நான்கு வருட இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5) வயது வரம்பு :
01.07.2022 தேதியின்படி UR பிரிவினருக்கு 18 வயது முதல் 33 வயது வரையிலும், OBC பிரிவினருக்கு 18 வயது முதல் 36 வயது வரையிலும், SC/ST பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 38 வயது வரையிலும் இருக்க வேண்டும்.
6) சம்பளம் :
"Z" வகுப்பிற்கான ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட்டுக்கான சம்பளம் 25,000, "Y" வகுப்பு ரூ. 27000 மற்றும் "X" வகுப்புக்கு ரூ. 30000 வழங்கப்படும்.
7) தேர்வு செய்யப்படும் முறை :
GATE சதவீதம்/தகுதி 55 மதிப்பெண்கள், அனுபவம் 30 மதிப்பெண்கள் மற்றும் ஆளுமை/நுண்ணறிவு/நேர்காணல் 15 மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுவார்கள்.
8) விண்ணப்ப கட்டணம் :
- SC, ST, முன்னாள் ராணுவ வீரர், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்: ரூ.250 செலுத்த வேண்டும். ஆளுமை/நுண்ணறிவுத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இந்த தொகை திருப்பியளிக்கப்படும்.
- மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும், ஆளுமை/புத்திசாலித்தனமான தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு ரூ.400 திரும்ப வழங்கப்படும்.
9) விண்ணப்பிக்கும் முறை :
NER இணையதளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று, 'கேரியர்' என்கிற பிரிவில் உள்ள தேவையான அறிவிப்பைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதில் "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதை கிளிக் செய்யவும். பிறகு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 'சப்மிட்' என்பதை கிளிக் செய்யவும்.
10) விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.07.2022
மேலும் படிக்க | SCI Recruitment 2022: இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புகள்: 210 பேருக்கு வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR