சூரியசக்தியில் இயக்கும் ரயில்கள்... இந்தியன் ரயில்வேயின் Wow திட்டம்..!

சூரியசக்தியில் ரயில்களை இயக்கும் பணியைத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் இந்திய ரயில்வே புதிய வரலாற்றை உருவாக்குகிறது..!

Last Updated : Jul 6, 2020, 04:00 PM IST
சூரியசக்தியில் இயக்கும் ரயில்கள்... இந்தியன் ரயில்வேயின் Wow திட்டம்..! title=

சூரியசக்தியில் ரயில்களை இயக்கும் பணியைத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் இந்திய ரயில்வே புதிய வரலாற்றை உருவாக்குகிறது..!

இனி இந்திய ரயில்வேயின் வழித்தடங்களில் சூரியசக்தியால் இயங்கக்கூடிய ரயில்கள் இயங்கும். இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே முக்கால்வாசி முடித்துவிட்டது. ரயில்வே தனது பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தின் பினாவில் ஒரு சூரிய மின் நிலையத்தை அமைத்துள்ளது. இது 1.7 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியது மற்றும் இந்த சக்தியுடன் ரயில்களை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ரயில்களை இயக்க சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படுவது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த மின்நிலையத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கிருந்து 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும், இதன் உதவியுடன் ரயில்கள் இயக்கப்படும். காலியாக உள்ள ரயில்வே நிலத்தில் BHEL நிறுவனத்துடன் இணைந்து மத்திய பிரதேசத்தின் பினாவில் 1.7 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரயிலை இயக்கக்கூடிய வகையில் உலகத்தில் இதுபோன்ற மின் உற்பத்தி நிலையம் இல்லை. 

READ | COVID-19 சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனை குறித்து புகாரளிக்க ஹெல்ப்லைன்!!

உலகின் பிற ரயில் நெட்வொர்க்குகள் சூரிய சக்தியை முதன்மையாக நிலையங்கள், குடியிருப்பு காலனிகள் மற்றும் அலுவலகங்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துகின்றன. சில ரயில்களின் கூரையில் சூரிய மின்சக்தி பேனல்களையும் இந்திய ரயில்வே நிறுவியுள்ளது, இதன் காரணமாக ரயில் பெட்டிகளில் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், இப்போது வரை எந்த ரயில் நெட்வொர்க்கும் ரயில்களை இயக்க சூரிய சக்தியைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Trending News