தன்னை காதலித்த 2 பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த ஆண்!!

வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் தன்னை காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரளாகி வருகிறது!

Last Updated : Aug 28, 2019, 02:56 PM IST
தன்னை காதலித்த 2 பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த ஆண்!!

வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் தன்னை காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரளாகி வருகிறது!

திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ்வுறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 

அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், இந்தோனேஷியாவை சேர்ந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் விரலாக பரவி வருகிறது. 

இதுகுறித்து அவர் கூறுகையில்; "இரண்டு பெண்களும் என்னை காதலித்தனர். ஆதலால், நான் இருவரையும் திருமணம் செய்து கொண்டேன். நான் அவர்களின் வரதட்சணைக்கோ அல்லது வேறு எதற்காகவோ ஆசைப்பட்டு திருமணம் செய்யவில்லை. நான் ஒருவரை மட்டும் திருமணம் செய்தால் மற்றவர் மணம் நொந்து விடுவார். என்னால் யார் மனமும் உடைந்து போவதை நான் விரும்பவில்லை, இதனால் ஒரே நேரத்தில் இருவரையும் திருமணம் செய்துவிட்டேன். இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்த பின்பு தான் இந்த முடிவை எடுத்தேன்" என அவர் தெரிவித்துள்ளார். 

இவரது திருமண புகைப்படம் மற்றும் வீடியோ முகநூளில் பயங்கர விரலாக பரவி வருகிறது. 

 

More Stories

Trending News