Jobs in India: இன்று ஜூலை 15 ஆம் தேதி "உலக இளைஞர் திறன் தினம்" (World Youth Skill Day) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் 600 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் திறமைகளைத் தேடி அவர்களுக்கு வாய்ப்பளிக்க உலகளாவிய நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக, பொருளாதார மந்தநிலையை அடுத்து பலருக்கு வேலையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா (Amazon India) சமீபத்தில் ஒரு திறன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், நிறுவனம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை கொண்டு வருகிறது.
ALSO READ | E-Commerce நிறுவனங்களுக்க அதிரடி உத்தரவு.. Country of origin தகவல் வேண்டும்
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) என்பது நிறுவனத்தின் புதிய திட்டமாகும். இந்நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த திட்டத்தின் நோக்கம் 1000 இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் திறமைகளை மேம்படுத்துவது தான். இதுக்குறித்து நிறுவனம் கூறுகையில், இந்த திட்டத்தில், சேமிப்புக் கிடங்கு (Warehouse) மற்றும் சரக்கு மேலாண்மைக்கான (Inventory Management)பயிற்சி இளைஞர்களுக்கு 6 மாதங்களுக்கு வழங்கப்படும். இது சேமிப்புக் கிடங்கு அசோசியேட்ஸ் மற்றும் பிராசஸ் அசோசியேட்ஸ் பணியில் வேலை செய்ய அவர்களுக்கு உதவும். இந்த திட்டம் இளைஞர்களுக்கானது, கோவிட் -19 தொற்றுநோயால் பயிற்சியும் இடமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | வேலை இல்லையா? கவலை வேண்டாம்; மணிக்கு ₹140 வரை சம்பாதிக்க ஒரு அரிய வாய்ப்பு!
இந்த திட்டத்திற்கான பயிற்சி மையங்கள் டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. அங்கு வகுப்பறை முதல் வேலை வரை கற்றல் மற்றும் மதிப்பீடு செய்யப்படும். NSDC அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்கள் (Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana) மற்றும் NSDC (National Skill Development Corporation) மூலம் அவர்களின் திறன் அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ALSO READ | Amazon, Flipkart-க்கு போட்டியாக வருகிறது பாரத் eMarket; ஒரு இந்திய படைப்பு!
இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு நிறுவனம் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கும். மேலும், இந்த பயிற்சித் திட்டத்தின் முடிவில், இளைஞர் மதிப்பீடு லாஜிஸ்டிக் துறை திறன் கவுன்சிலால் செய்யப்படும், மதிப்பீட்டிற்குப் பிறகு, அவர்களுக்கும் சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகு பகுதி நேரம் அல்லது முழுநேர வேலைகள் போன்ற வாய்ப்புகளும் இளைஞர்களுக்கு கிடைக்கும்.
ALSO READ | வீட்டில் இருந்தபடி மாதம் ₹.20,000 வரை சம்பாதிக்கலாம்; Amazon-ன் புதிய திட்டத்தில்...
உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு அனைத்து பயிற்சி அமர்வுகளும் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், சமூக விலகல் மற்றும் வழக்கமான சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த திட்டத்தின் மூலம், இளைஞர்களை தன்னம்பிக்கை கொள்ளச் செய்வதற்கும் அதை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு அமேசான் இந்தியா பங்களிக்கும்.