Widow Pension Scheme: அரசின் இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே

கணவர் இறந்த பிறகு வாழ முடியாத நிலையில், பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் நேரடி பயனைப் பெறுகிறார்கள். இருப்பினும், இந்த திட்டத்தை பயன்படுத்த, சில குறிப்பிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2021, 06:19 PM IST
  • கைம்பெண் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஏழை கைம்பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
  • திட்டத்தின் நன்மைகளைப் பெற சில ஆவணங்கள் அவசியம்.
  • இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இப்போது 500 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கிறது.
Widow Pension Scheme: அரசின் இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே title=

மத்திய அரசின் கைம்பெண் ஓய்வூதியத் திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மற்றும் ஆதரவற்ற விதவை பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஏழை கைம்பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

கணவர் இறந்த பிறகு வாழ முடியாத நிலையில், பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் நேரடி பயனைப் பெறுகிறார்கள். இருப்பினும், இந்த திட்டத்தை பயன்படுத்த, சில குறிப்பிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.

துவக்கத்தில், இந்த திட்டத்தின் கீழ் விதவைகளுக்கு 300 ரூபாய் ஓய்வூதியமாக (Pension) வழங்கப்பட்டது. எனினும், இப்போது அரசு ஓய்வூதியத் தொகையை ரூ .500 ஆக உயர்த்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இப்போது 500 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கிறது.

கைம்பெண்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைக்கும்

இந்த திட்டத்தின் பலனை கைம்பெண்கள் மட்டுமே பெறுவார்கள். இத்திட்டத்தின் பயன்களைப் பெற, கைம்பெண்களுக்கு வயது 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும். கைம்பெண்களுக்கு குழந்தைகள் இருந்து அவர்களை கவனிப்பதில் சிரமம் இருந்தால், அதற்கான ஓய்வூதியம் கிடைக்கக்கூடும். இது தவிர, கைம்பெண் மறுமணம் செய்து கொண்டால், இந்த திட்டத்தின் நன்மை கிடைக்காது.

ALSO READ: வெறும் 5 நிமிடத்தில் அஞ்சல் அலுவலகத்தில் ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்யலாம்!!

திட்டத்தின் நன்மைகளைப் பெற இந்த ஆவணங்கள் அவசியம்

மத்திய அரசின் கைம்பெண் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நன்மைகளப் பெற கணவரின் இறப்பு சான்றிதழ், விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை (Aadhaar Card), குடியிருப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், வயது சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள், மொபைல் எண் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவைப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

மத்திய அரசின் (Central Government) கைம்பெண் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நன்மைகளப் பெற, கைம்பெண் ஓய்வூதிய திட்டத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் பெயரை அங்கே பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்களிடம் தேவையான தகவல்கள் கேட்கப்படும். கேட்கப்படும் தகவலை சரியாக பூர்த்தி செய்த பிறகு, சப்மிட் செய்யும் ஆப்ஷனைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும்.

ALSO READ: Video பார்த்துக்கொண்டே Shopping: YouTube அறிமுகப்படுத்தும் அசத்தலான அம்சம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News