ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி, கம்மி விலையில் சிலிண்டர் பெறலாம்

LPG Cylinder at Ration Shops: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கேஸ் சிலிண்டர் விலையில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் தற்போது புதிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி ரேஷன் கார்டைக் காண்பித்தால், கம்மி விலையில் நீங்கள் கேஸ் சிலிண்டரைப் பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 2, 2023, 01:27 PM IST
  • ரேஷன் கார்டுக்கு காஸ் சிலிண்டர்.
  • ரேஷன் கார்டு புதுப்பிப்பு.
  • பாதி விலையில் கேஸ் சிலிண்டரைப் பெறலாம்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி, கம்மி விலையில் சிலிண்டர் பெறலாம் title=

Ration Card Update: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வெளியாகியுள்ளது. அந்த வகையில் நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இனி வெறும் 500 ரூபாய் செலுத்தி கேஸ் சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காஸ் சிலிண்டர் விலையில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது காஸ் சிலிண்டரின் விலை 1000 ரூபாவைத் தாண்டியுள்ளது. இதற்கிடையில், ரேஷன் கார்டைக் காண்பித்தால், பாதி விலையில் சிலிண்டரை பெறலாம். எனவே இந்தத் திட்டத்தின் மூலம் எந்தெந்த மக்கள் பயன்பெறுவார்கள் என்பதைச் தெரிந்துக்கொள்ளுங்கள்.

யார் யாருக்கு பலன் கிடைக்கும்?
இந்த நிலையில் பாதி விலையில் கேஸ் சிலிண்டர்களை கொடுக்க தற்போது ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசு எடுத்த இந்த முடிவு 2023 ஏப்ரல் முதல் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும். அதோடு இந்த பலன் பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடிப்படை ஊதியத்தில் ஏற்றம், மாத சம்பளத்தில் பம்பர் உயர்வு 

ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் கிடைக்கும்
இதற்கிடையில் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், 12 சிலிண்டர்கள் வழங்கும் வசதியை அரசு வழங்குகிறது. மறுபுறம் தற்போது உங்களுக்கு 500 ரூபாயில் சிலிண்டர் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இதனிடையே பணவீக்க சுமையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு திட்டங்களை வகுத்து வரும் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1: சிலிண்டர் விலை உயர்வு
ஜனவரி 2023 முதல், வணிக சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. அதே சமயம், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதே சமயம் வர்த்தக சிலிண்டர்களுக்கு ரூ.25 கூடுதலாக செலுத்த வேண்டும்.

வீட்டு சிலிண்டர் விலை நிலவரம்
>> டெல்லி - 1053
>> மும்பை - 1052.5
>> கொல்கத்தா - 1079
>> சென்னை - 1068.5

மேலும் படிக்க | Business Idea: வெறும் ரூ.5,000 முதலீட்டில் பெரிய அளவில் சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News