எல்பிஜி இணைப்பு புதுப்பிப்பு: பணவீக்க உயர்வால் சிரமப்படும் மக்களுக்கு மற்றொரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கமர்ஷியல் எல்பிஜி கனெக்ஷன் எனப்படும் வணிக செயல்முறைகளுக்கான எல்பிஜி எரிவாயு இணைப்பு வாங்குவது தற்போது விலை உயர்ந்ததாகிவிட்டது. இதன் செக்யூரிட்டி டெபாசிட், அதாவது பாதுகாப்பு வைப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட விலை இன்று (ஜூன் 28) முதல் அமலுக்கு வருகிறது.
புதிய கட்டணங்களின்படி, இப்போது வாடிக்கையாளர்கள் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி இணைப்புக்கு ரூ.2550க்கு பதிலாக ரூ.3600 செலுத்த வேண்டும். செக்யூரிட்டி டெபாசிட் ரூ.1050 உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வீட்டு உபயோக எல்பிஜி இணைப்புகளுக்கான பாதுகாப்பு வைப்புத்தொகையை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
47 கிலோ எரிவாயு இணைப்பும் விலை உயர்ந்தது
இது தவிர 47 கிலோ எரிவாயு இணைப்புக்கான பாதுகாப்பு வைப்புத் தொகையும் அதிகரித்துள்ளது. முன்னதாக 47 கிலோ எரிவாயு இணைப்பின் விலை ரூ.6450 ஆக இருந்தது, தற்போது ரூ.7350 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, அதன் விலை ரூ.900 அதிகரித்துள்ளது. இது தவிர, முன்பு 14.2 கிலோ எரிவாயு இணைப்புக்கான விலை முன்னர் ரூ.1450 ஆக இருந்தது, ஆனால் இன்று முதல் ரூ.2200 பாதுகாப்பு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். அதே சமயம் 5 கிலோ எரிவாயு இணைப்புக்கு இப்போது ரூ.1150 செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | LPG Gas Connection: கேஸ் கனெக்ஷன் விலை கடும் உயர்வு ; மக்கள் வேதனை
ரெகுலேட்டரின் விலையும் உயர்ந்தது
எரிவாயு இணைப்புடன், ரெகுலேட்டரின் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.150க்கு கிடைக்கும் ரெகுலேட்டர் இப்போது ரூ.250க்கு கிடைக்கும். ரெகுலேட்டர் உடைந்துவிட்டாலோ, அல்லது பழுதடைந்தாலோ, அதை மாற்றவும் 300 ரூபாய் செலுத்த வேண்டும். எங்கள் கூட்டாளர் இணையதளமான ஜி பிசினசின் படி, எரிவாயு இணைப்பின் பாதுகாப்பு வைப்புத்தொகை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக எல்பிஜி இணைப்பும் விலை உயர்ந்தது
இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜூன் 16ம் தேதி வீட்டு உபயோக புதிய எல்பிஜி இணைப்பும் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்கள் 14.2 கிலோ சிலிண்டரின் பாதுகாப்புத் தொகையை ரூ.750 உயர்த்தியுள்ளன. இப்போது உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் மற்றொரு எரிவாயு இணைப்பு எடுத்தால், அவர்களும் உயர்த்தப்பட்ட தொகையை செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | LPG subsidy: எல்பிஜி மீதான மானியம் குறித்து அரசின் பெரிய அறிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR