கூகுள் மேப்பில் சத்ரபதி சிவாஜியின் உருவம்; அசத்தும் கிராம மக்கள்!

மகாராஷ்டிராவில் வயல்வெளியில் பயிர்களை கொண்டு கிராம மக்கள் சேர்ந்து உருவாக்கிய வீரசிவாஜியின் உருவம் கூகுள் மேப்ஸில் தெரிவது பலரையும் கவர்ந்துள்ளது!!

Last Updated : Jun 20, 2019, 04:36 PM IST
கூகுள் மேப்பில் சத்ரபதி சிவாஜியின் உருவம்; அசத்தும் கிராம மக்கள்! title=

மகாராஷ்டிராவில் வயல்வெளியில் பயிர்களை கொண்டு கிராம மக்கள் சேர்ந்து உருவாக்கிய வீரசிவாஜியின் உருவம் கூகுள் மேப்ஸில் தெரிவது பலரையும் கவர்ந்துள்ளது!!

மகாரஷ்டிர மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் நிலங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சத்திரபதி சிவாஜியின் உருவத்தை கிராம மக்கள் உருவாக்கி உள்ளனர். இதனை கூகுள் மேப்ஸின் சேட்டிலைட் வியூவ் மூலம் முழுமையாக காண முடிகிறது. சத்திரபதி சிவாஜியின் உருவத்தை தத்ரூபாக பயிரில் உருவாக்கி உள்ளது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் கூகுள் மேப்ஸில் இதனை எப்படி பார்ப்பது என்பதை வீடியோவாக எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். வீரசிவாஜியின் உருவம் கூகுள் மேப்ஸில் காண...... 

அவற்றில் சில ட்விட்டர் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 

 

Trending News