வேறு பெண்ணை அழைத்துச் சென்ற கணவரின் காரை வழிமறித்து கணவரின் முடியை பிடித்து தரதர என இழுத்து சென்ற மனைவி!!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். ட்விட்டர் ஒரு அழகான இடம், நீங்கள் மீண்டும் மீண்டும் செல்லக்கூடிய விஷயங்களை மீண்டும் மீண்டும் காணலாம். இந்நிலையில், வேறு பெண்ணை அழைத்துச் சென்ற கணவரின் காரை வழிமறித்து கணவரின் முடியை பிடித்து தரதர என இழுத்து சென்ற மனைவியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் வேறு பெண்ணை காரில் அழைத்துச் சென்ற கணவரின் காரை வழிமறித்து மனைவி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தெற்கு மும்பை பகுதியில் பெட்டர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை பெட்டர்சாலையில் கருப்பு நிற ரேஞ்ச்ரோவர் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த ஒரு வெள்ளை நிற கார், ரேஞ்ச் ரோவர் காரை விரட்டி சென்று பிடித்தது.
READ | கண்களை போன்று நமது மூளையும் எப்போதாவது ஓய்வெடுக்கிறதா?....
வெள்ளை நிற காரில் இருந்து இறங்கிய ஒரு பெண், ரேஞ்ச் ரோவர் காரை வழிமறித்து சாலை நடுவில்நின்று திட்ட ஆரம்பித்தார். காரின் ஓட்டுநர்இருக்கையில் இருந்த நபரைவெளியே இழுக்க முயன்றார். காரின் பேனட் மீது ஏறி கூச்சலிட்டார். அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த 3 காவலர்களும் தலையிட்டு ரேஞ்ச் ரோவர் காரையும், வெள்ளை நிற காரையும் காம்தேவி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
It seems a husband is with some other female in the car. Caught by wife, at Peddar Road. #yehtohgaya pic.twitter.com/hVa2XA52lY
— whiskeylovin’pundit (@theteefactory) July 12, 2020
இது குறித்து மும்பை போக்குவரத்து காவலர் கூடுதல் கமிஷனர் பிரவீண் பட்வால் கூறுகையில்... "ரேஞ்ச் ரோவர் காரில் 30 வயதான ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இருந்தனர். வெள்ளை நிற காரில் வந்த பெண், ரேஞ்ச் ரோவர் காரில் இருந்த ஆணின் மனைவி ஆவார். சந்தேகத்தின் பேரில் அந்த பெண், கணவரின் காரை வழிமறித்துள்ளார். அங்கு போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. சாலையில் காரை நிறுத்திவிட்டு, மற்றொரு காரை வழிமறித்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை" என்று தெரிவித்தார். இந்நிலையில், ரேஞ்ச் ரோவர் காரை வழிமறித்து மனைவி போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.