WOW நிஜமா! இட்லி, உப்புமா 3 ஆண்டுவரை கேட்டுப் போகாதாம்...

இட்லி, உப்புமா 3 ஆண்டுகளுக்கு மேல் கெடாமல் இருக்கும் என மும்பை பேராசிரியை விளக்கம் தெரிவித்துள்ளார்!

Last Updated : Feb 8, 2019, 09:05 AM IST
WOW நிஜமா! இட்லி, உப்புமா 3 ஆண்டுவரை கேட்டுப் போகாதாம்...  title=

இட்லி, உப்புமா 3 ஆண்டுகளுக்கு மேல் கெடாமல் இருக்கும் என மும்பை பேராசிரியை விளக்கம் தெரிவித்துள்ளார்!

தென் இந்தியாவில் உணவு என்றாலே முதலில் நிலைவுக்கு வரும் உணவுவகைகளின் இட்லி, தோசை, சாம்பார், உப்புமா ஆகியவை பிரசித்திபெற்றது. இந்நிலையில், இட்லி, உப்புமா உணவு வகைகள் சுமார் 3 ஆண்டுவரை கெட்டுப்போகாது என இயற்பியல் பேராசிரியர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.  

இட்லி, டோக்ளா,  போன்ற வேக வைத்த உணவுப் பொருட்களை 3 அல்லது 4 ஆண்டுகள் கெட்டுப் போகாமல் பராமரிப்பதற்கான புதிய தொழில் நுட்பத்தை மும்பை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்  இயற்பியல் பேராசிரியை டாக்டர் வைஷாலி பாம்போலே கண்டு பிடித்துள்ளார்.

இது குறித்து ANI செய்தி நிறுவனத்திடம் அவர் கூறுகையில், இட்லி உப்புமா, டோக்ளா போன்றவற்றை எந்தவித கூடுதல் பொருட்களும் சேர்க்காமல் அப்படியே 3 ஆண்டுகளுக்கு மேல் பராமரிப்பதற்கான பீம் ரேடியேசன் என்ற தொழில்நுட்பத்தை தாம் கண்டுபிடித்திருப்பதாக கூறினார். உணவின் சுவை கெடாமல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எண்ணெய்ப் பொருள், புரோட்டீன் குறைவாக உள்ள உணவையே தமது ஆய்வுக்கு தாம் தேர்ந்தெடுத்ததாகவும் 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதாகவும் டாக்டர் வைஷாலி விளக்கினார். இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களிலும் விண்வெளி ஆய்வாளர்கள், ராணுவத்தினருக்கும் இந்த தொழில்நுட்பம் பலன் தரும் என்றும் வைஷாலி தெரிவித்தார். 

 

Trending News