NTA இணையதளம் முடக்கம்! NEET Exam முடிவுகளை அறிய முடியாமல் மாணவர்கள் தவிப்பு

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு (NEET Exam Results 2020 ) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ntaneet.nic.in எனும் இணைய முகவரியில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2020, 06:25 PM IST
  • மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • தேர்வு முடிவுகளை nta.ac.in அல்லது ntaneet.nic.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
  • தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக தேசிய தேர்வு முகமை இணையதளம் முடங்கியுள்ளது.
NTA இணையதளம் முடக்கம்! NEET Exam முடிவுகளை அறிய முடியாமல் மாணவர்கள் தவிப்பு title=

NEET Result 2020: 15 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ படிப்பு படிக்கும் ஆர்வமுள்ளவர் எழுதிய மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு (NEET Exam Results 2020 ) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ntaneet.nic.in எனும் இணைய முகவரியில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு, கொரோனா (Coronavirus) தொற்றுநோய் இருந்தபோதிலும், செப்டம்பர் 13 அன்று மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 14.37 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டு எழுதினார்கள். தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வில் வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் தங்கள் முடிவுகளை nta.ac.in அல்லது ntaneet.nic.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம். முடிவை சரிபார்க்க மாணவர்கள் அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரோல் எண்ணை உள்ளிட வேண்டும்.

ALSO READ | NEET Result 2020: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

டாக்டர் ஆக வேண்டும் என பல மாணவர்களின் கனவு என்பதால், நீட் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டவு, ஒரே நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையிலானோர் மாணவ-மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் இணயதளத்தை பார்வையிட்டதால் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக தேசிய தேர்வு முகமை இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News