How Orange Peel Tea Helps To Lose Weight : ஆரஞ்சு பழத்தில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பல உடல்நலப் பிரச்சனைகளில் நமக்கு நன்மை தருகிறது. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே, அதன் தோலிலும் பல சத்துக்கள் நிரம்பியுள்ளது. அதன்படி இந்த தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இது தவிர, இதில் வைட்டமின் சி உள்ளதால், இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்நிலையில் நீங்கள் உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தால், ஆரஞ்சு தோல் தேநீர் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த டீயில் உள்ள அத்தியாவசிய கூறுகள் விரைவான உடல் எடையை குறைக்க உதவும்.
உடல் எடை குறைக்க ஆரஞ்சு தோல் தேநீர் எவ்வாறு உதவும் | How Orange Peel Tea Helps To Lose Weight :
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் - Boost Metabolism
உடல் எடை குறைக்க வலுவான வளர்சிதை மாற்றம் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆரஞ்சு தோல் தேநீர் உடல் எடையை குறைக்க உதவும். ஏனெனில் இதில் சினெஃப்ரின் கலவை காணப்படுகிறது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் கலோரியை குறைக்கவும், கொழுப்பை எரிக்கவும் உதவும்.
நார்ச்சத்து நிறைந்துள்ளது - High Fiber Content
ஆரஞ்சு தோலில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே இதன் டீ குடித்து வந்தால் பசி கட்டுப்படுத்த உதவும். மேலும் இந்த தேநீரை குடிப்பதன் மூலம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பி இருக்கும். அதுமட்டுமின்றி ஆரஞ்சு தோல் தேநீர் ஸ்வீட் ஆசையை கட்டுபடுத்த உதவும்.
மேலும் படிக்க | glowing Skin tips: ஒரு வாரத்தில் சருமம் பளபளக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்
நீர் எடையை குறைக்க உதவும் - Reduce Water Weight
ஆரஞ்சு தோல் தேநீர் உடலில் இருக்கும் கூடுதல் நீரை வெளியேற்ற உதவும். வீக்கத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது. இதில் உள்ள கூறுகள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற பெரிய அளவில் உதவும்.
ஆரஞ்சு தோல் தேநீர் தயாரிப்பது எப்படி - How To Make Orange Peel Tea
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு தோல்கள் - 4-5
இலவங்கப்பட்டை - ஒரு சிட்டிகை
தேன் - அரை தேக்கரண்டி
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
செயல்முறை:
முதலில் ஆரஞ்சு தோலை நன்றாக உலர்த்தி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை சூடாக்கவும்.
அதில் ஆரஞ்சு பழத்தோலை சேர்த்து கொதிக்க விடவும்.
இப்போது ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
தண்ணீர் பாதியானதும் கேஸை ஆஃப் செய்து தேநீரை வடிகட்டவும்.
பின்னர் அதில் தேன் சேர்த்து ஆரஞ்சு தோல் தேநீரை பருகவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ