தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு வருகின்றனர். சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து பணி செய்பவர்கள், பண்டிகை காலத்தையொட்டி ரயிலில் முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணித்துக் கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் புறப்படும் இடத்தை தேர்வு செய்து வைத்திருப்பீர்கள். ஆனால், இப்போது சூழல் வேறாக இருக்கும். அதனால், நீங்கள் புறப்படும் இடத்தை மாற்ற வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
அப்படியான பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் போர்டிங் ஸ்டேஷனை மாற்றலாம். இருப்பினும், பயண முகவர்கள் அல்லது பயணிகள் முன்பதிவு அமைப்பு மூலம் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி இல்லை.
மேலும் படிக்க | செல்ல மகள்களுக்கு ஜாக்பாட், புதிய திட்டம் அறிவிப்பு - 80,000 ரூபாய் கிடைக்கும்
IRCTC இல் போர்டிங் பாயிண்டை மாற்றுவது எப்படி?
* உங்கள் IRCTC கணக்கில் உள்நுழையவும்
* எனது கணக்கு > எனது பரிவர்த்தனைகள் > முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வரலாறு என்பதற்குச் செல்லவும்
* நீங்கள் மாற்ற விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, கீழே உள்ள 'போர்டிங் பாயிண்டை மாற்று' ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பாதைக்கு இடையே உள்ள நிலையங்களின் பட்டியலை IRCTC காண்பிக்கும். மாற்றத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* மாற்றத்தைச் செயல்படுத்த ‘சரி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
போர்டிங் பாயின்ட் மாற்றப்பட்டிருந்தால், வெற்றிகரமான எச்சரிக்கை வலதுபுறத்தில் தோன்றும். தொடர்புடைய செய்தி உங்கள் மொபைல் எண்ணுக்கும் அனுப்பப்படும். இதற்கு தனியாக நீங்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், வெளியானது பக்கா மாஸ் செய்தி
மேலும் படிக்க | ரயில் முன்பதிவில் AI தொழில்நுட்பம்..! பயணிகளுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ