Sandakozhi 2: முதல் பாகத்தின் ஹிட்டை முறியடித்ததா 2ம் பாகம்?

விஷால் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள சண்டக்கோழி 2 படத்தின் டிவிட்டர் விமர்சனம் என்ன?

Last Updated : Oct 18, 2018, 01:03 PM IST
Sandakozhi 2: முதல் பாகத்தின் ஹிட்டை முறியடித்ததா 2ம் பாகம்? title=

விஷால் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள சண்டக்கோழி 2 படத்தின் டிவிட்டர் விமர்சனம் என்ன?

கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி. 

முதல் பாகத்தின் ஹிட்-க்குப் பிறகு, இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி மீண்டும் கைகோர்த்துள்ளனர். அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இது விஷாலின் 25-வது படமாகும். இவர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும்,‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்துள்ளனர். 

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள சண்டக்கோழி 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் படம் பார்த்தவர்கள் கூறும் கருத்துகளை இங்கு காணலாம்.

 

 

 

 

 

 

 

Trending News