7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: நீண்ட நாட்களாக அகவிலைப்படிக்காக (டிஏ) காத்திருக்கும் மத்திய ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கலாம். நவராத்திரி பண்டிகையில் அகவிலைப்படி அதிகரிப்பை அரசு அறிவிக்கலாம். இதன் கீழ், டிஏ 3-4 சதவீதம் வரை அதிகரிப்பு இருக்கலாம். தற்போதுள்ள மத்திய ஊழியர்களுடன் (Central Government Employees) ஓய்வூதியம் பெறுபவர்களும் புதிய அதிகரிப்பின் வரம்பில் சேர்க்கப்படுவார்கள். மேலும் இது ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். பண்டிகைகளுக்கு முன்னதாக அகவிலைப்படி அறிவிப்பதன் மூலம், நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தேவைகளை கருதில் கொண்டு அகவிலைப்படி கூடிய விரைவில் அரசு தரப்பில் இருந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நம்பிக்கை அதிகரித்துள்ளது:
கடந்த சில ஆண்டுகளின் சாதனையை பார்த்தால், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அரசு அகவிலைப்படி - டிஏ (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் - டிஆர் உயர்த்தி அறிவித்து வருகிறது. மேலும், இந்த நேரத்தில், பணியாளர்கள் மொத்தமாகப் பெறுவதால், பொருளாதாரம் ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இம்முறையும் அக்டோபர் 15க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மறுபுறம், ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பையும் வெளியிட உள்ளது. இதற்கு முன் அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது. மேலும் ஜூலை 2023 முதலான அகவிலைப்படி அதிகரிப்பின் அரியர் தொகையும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
அகவிலைப்படி (டிஏ) எவ்வளவு அதிகரிக்கும்?
தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (சிபிஐ-ஐடபிள்யூ) அடிப்படையிலான அகவிலைப்படி கணக்கீட்டு ஃபார்முலா நடைமுறைப்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 4 சதவீதம் வரை உயர்வு இருக்கலாம். இந்த உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி 45 முதல் 46 சதவீதமாக உயரும். அரசு ஊழியர்களுக்கு DA (அகவிலைப்படி), ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) வழங்கப்படுகிறது. இது வருடத்திற்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது. இது ஜனவரி மற்றும் ஜூலை முதல் பொருந்தும். இதற்கு முன், கடந்த மார்ச் 2023 இல், DA (Dearness Allowance) மற்றும் DR (Dearness Relief) நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. இதுவரை, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, கர்நாடகா போன்ற மாநில அரசுகள் தங்கள் மாநில ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அரியர் தொகையும் கிடைக்கும்
ஜூலை 1 2023 முதல் நடைமுறைக்கு வரும் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு இந்த மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நிலையில், அதிகரிக்கப்பட்ட டிஏ அக்டோபர் மாத சம்பளத்துடன் வரும். இது மட்டுமின்றி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி அதிகரிப்பு அரியர் தொகையும் (DA Arrears) ஊழியர்களுக்கு இந்த அக்டோபர் சம்பளத்துடன் சேர்ந்து கிடைக்கும். இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பம்பர் பண வரவு இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | RBI Repo Rate: ரெப்போ விகிதம் தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ