பட்ஜெட் 2022 செய்திகள்: கிரிப்டோகரன்ஸிகளை (Cryptocurrency) எப்படி அனுமதிப்பது என்பதை மத்திய அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், கிரிப்டோகரன்ஸிகள் டிஜிட்டல் சொத்தாக கருதப்படும் என்று நீண்ட காலமாக அரசு தரப்பில் இருந்து வெளியாகும் ஆதாரங்கள் கூறி வருகின்றன. இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman), டிஜிட்டல் சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருவாயின் மீது அதிபட்ச வரியான 30% வரி விதிக்கப்படும் என்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் சொத்துக்கள் என்றால் என்ன!? அதற்கு ஏன் இவ்வளவு அதிகமான வரி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளவில் கடந்த 10 ஆண்டுகளாக பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்ஸிகள் (Digital Currency) பிரபலமாக உள்ளன. இந்த கரன்ஸிகள் சிலரை கோடீஸ்வரர்களாகவும், பலரை பிச்சைக்காரர்களாகவும் மாற்றி இருக்கிறது. ஆனால் இந்த கரன்ஸிகள் எந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் இயங்காததால் பல நாடுகள் இந்த டிஜிட்டல் கரன்ஸியை முறைபடுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
தற்போது டிஜிட்டல் கரன்ஸியை முறைபடுத்தும் நோக்கில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதல்படியாக க்ரிப்டோ கரன்ஸிகளை பரிவர்த்தனைக்கு பயன்படும் பணமாக பார்க்க முடியாது. அதனை சொத்தாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் டிஜிட்டல் கரன்ஸியாக ரிசர்வ் வங்கியின் சார்பில் புதிய டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ALSO READ | விரைவில் இந்தியாவில் Digital Currency! டிஜிட்டல் கரன்ஸி என்றால் என்ன?
இதன் அடுத்தகட்டமாக பிட்காயின் (Bitcoin) மாதிரியான டிஜிட்டல் சொத்துகளுக்கு 30 சதவீத வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜி.எஸ்.டி, வருமான வரி, இவை மீது விதிக்கப்படும் வரிகளை விட டிஜிட்டல் சொத்துக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் 30% மிக அதிகம். கிரிப்டோகரன்சிகள் மீதான அதிகப்படியான வரி விதிப்பால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிஜிட்டல் சொத்து பரிவர்த்தனைகளை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யும் நோக்கில் சில நடவடிக்களை மோடி அரசாங்கம் (Modi government) எடுத்தது. ஆனால் தற்போது அதற்குப் பதிலாக அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
அதேநேரத்தில் டிஜிட்டல் சொத்துக்கள் மீது கிடைக்கும் லாபம் மிக அதிகம் என்பதால் அதன் மீதான மக்களின் ஆர்வம் குறையாது என்பது பொருளாதார அறிஞர்களின் கருத்தாக உள்ளது.
ALSO READ | Cryptocurrency: கட்டுப்பாடா? தடையா? இந்திய அரசின் முடிவு என்ன!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR