2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் Bharat Stage-IV (BS-IV) வாகனம் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
பாரத ஸ்டேட் பாலிசி எமிஷன் தரநிலைகள் என்பது மோட்டார் வாகனங்களில் இருந்து வான் மாசுபாடுகளின் வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான அரசாங்கத்தால் வழங்கப்படும் தரமாகும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி Bharat Stage-IV (அல்லது BS-IV) உமிழ்வு விதி ஏப்ரல் 1, 2020 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதன்படி 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் Bharat Stage-IV (BS-IV) வாகனம் விற்பனை செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி மதன் பி லொகூர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்பினை அளித்துள்ளது.
முன்னதாக பெட்ரோலியம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் 2020 ஏப்ரல் முதல் Bharat Stage-IV இணக்க வாகனங்களை விற்பனை செய்வதற்காக உச்ச நீதிமன்றம் உத்திரவிடவேண்டும் என மனு அளித்துள்ளனர். Bharat Stage-IV வாகனங்களின் உற்பத்தியை மட்டுமல்லாமல், BS-VI இன் இணக்கமற்ற அல்லது குறைவான விண்டேஜ் வாகனங்களையும் ஏப்ரல் 2020-ல் இருந்து தடை செய்ய வேண்டும் என இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த உத்தரவினை ஏற்றுக்கொண்ட உற்பத்தி நிறுவனங்கள் முன்னதாக உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் விற்றுக்கொள்வதற்கு 6 மாத காலம் அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கள் செய்தது, இந்நிலையில் இந்த மனுவினை நிராகரித்த உச்ச நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் Bharat Stage-IV (BS-IV) வாகனம் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக BS IV வகை வாகனங்கள் தடை செய்யப்படுவதாக நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது!