வரலட்சுமி விரதம் 2021: பூஜைக்கு தேவையான பொருட்கள் என்ன?

வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2021, 11:57 AM IST
வரலட்சுமி விரதம் 2021: பூஜைக்கு தேவையான பொருட்கள் என்ன? title=

வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். நாளை வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை (Varalakshmi Vratham) கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் பௌர்ணமி (Pournami) நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக் கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் முதல் நாளான வியாழனன்றே அம்மனை அழைக்கிறோம்.

ALSO READ | Varalakshmi Viradha 2021: 16 வகை செல்வத்தையும் தரும் வரலட்சுமி நோன்பு; விரத நேரங்கள் 

வரலட்சுமி விரத பூஜைக்கு தேவையான பொருட்கள்
சின்ன வாழைக்கன்று இரண்டு
தோரணம் (கிடைத்தால்)
மாவிலை தோரணத்திற்கு.
முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் பின் அலங்காரத்தை ரசிக்க)
பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு
அம்பாளை வைக்க சொம்பு.

பூஜைக்கு தேவையான பொருட்கள்
திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)
பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
பஞ்ச பாத்திரம், உத்தரினி.
இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள்
மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
அர்க்கியம் விட கொஞ்சம் பால்

நைவேத்திய பொருட்கள்
இட்லி
அப்பம்
வடை (உளுந்து வடை)
கொழுக்கட்டை
வெல்ல பாயசம்
கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News