உடல் எடையை குறைக்க வேண்டுமா? வாழைத்தண்டை ‘இப்படி’ சாப்பிட்டு பாருங்கள்..!

Weight Loss Tips Tamil: வாழைத்தண்டு, உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும். இதை வைத்து எப்படி உடல் எடையை குறைப்பது? 

Written by - Yuvashree | Last Updated : Oct 16, 2023, 05:58 PM IST
  • உடல் எடையை குறைக்க வேண்டுமா?
  • சிறுநீரக பிரச்சனைகளை தடுக்க வேண்டுமா?
  • வாழைத்தண்டை இப்படி உபயோகப்படுத்துங்கள்.
உடல் எடையை குறைக்க வேண்டுமா? வாழைத்தண்டை ‘இப்படி’ சாப்பிட்டு பாருங்கள்..!

வாழை மரம் என்று எடுத்துக்கொண்டாலே, அதில் உள்ள அனைத்து பொருட்களும் உபயோகப்படும் வகையில் இருக்கும். வாழை இலை, வாழை பழமாவதற்கு முன்னர் ஸ்டேஜான வாழைக்காய், வாழை நார், வாழைப்பழம் என அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்கும். 

Add Zee News as a Preferred Source

வாழைத்தண்டினால் ஏற்படும் நன்மைகள்:

வாழைத்தண்டு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகள் நிறைந்த காய்களுள் ஒன்று. வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதால் வயிற்றிலுள்ள புண் நீங்கும். புண் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் அமிலத்தையும் இது அழிக்க உதவும். வாழைத்தண்டில், வாழைப்பழம் போலவே பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் நிறைந்துள்ளன. இது, உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். வாழைத்தண்டை, கூட்டாகவோ பொரியலாகவோ சாப்பிடலாம். அல்லது பச்சையாக வேக வைத்து சாலட் ஆகவும் சாப்பிடலாம். அது மட்டுமல்ல, வாழைத்தண்டினை சாறாக்கி ஜூஸாக குடிக்கலாம். 

வாழை

வாழைத்தண்டு ஜூஸ்:

உடல் எடையை குறைக்க விரும்புவோர், உடலில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புவோர் வாழைத்தண்டை ஜூஸ் ஆக்கி குடிக்கலாம். இதில், உள்ள நார்ச்சத்து குறைந்த அளவு கலோரிகள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். அதே போல, வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் வயிறு நிறைவாக இருக்கும். அதிகம் பசி எடுப்பதை தடுக்கும். மேலும், வாழைத்தண்டில் காணப்படும் சிறப்பு வகை நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவி, உடல் எடையை குறைக்க வழி வகுக்கிறது. 

மேலும் படிக்க | அடிவயிறு தொப்பை குறையணுமா? அப்போ இந்த காயை இப்படி சாப்பிடுங்கள்

வாழைத்தண்டு ஜூஸ் செய்வது எப்படி?

வாழைத்தண்டு ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

>வாழைத்தண்டு ஒரு கப் (நறுக்கியது)
>எலுமிச்சை சாறு-1 டேபில் ஸ்பூன்
>தண்ணீர் - 1 கப்
>தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை 

எப்படி செய்வது?

>ஒரு கப் தண்ணீரில் வாழைத்தண்டை 1 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். 
>ப்ளெண்டரை வைத்து ஜூஸ் ஆக்க வேண்டும். 
>அடுத்து, எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். 
>அனைத்தையும் நன்றாக கலக்கி குடிக்கலாம். 

வயிறு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கும்…

உடலில் கலந்துள்ள நச்சுக்களை (toxic) வெளியேற்ற, வாழைத்தண்டு உதவும். மலச்சிக்கல், செரிமான கோளாறுகள், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவற்றை வாழைத்தண்டு சரி செய்யும். வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின் பி6 சத்தும் இரும்பு சத்தும் நம் உடலில் உள்ள ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவும். அதே போல, வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியம் சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை நீக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வாழைத்தண்டில் நார்ச்சத்துகளுதவும். மேலும், இதயம் உள்ளிட்ட முக்கிய உடலில் தசைகளை வலுப்படுத்த வாழைத்தண்டு உதவும். 

சிறுநீரக கற்கள்:

வயிற்று உபாதைகளுள் மிகவும் கொடியதாக இருப்பது, சிறுநீரக கற்கள். வாழைத்தண்டு ஜூஸுடன் சிறிதளவு ஏலக்காயையும் சேர்த்து பருகினால், சிறுநீரகங்களை சீறாக்க உதவும். இதனால், சிறுநீரக கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். எலுமிச்சை சாறினையும் கலந்து குடிப்பதால், சிறுநீரக கற்கள் வராமல் தவிர்கலாம். சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்றுகளை வராமல் தடுக்க வாழைத்தண்டு ஜூஸ் உதவும். 

மேலும் படிக்க | Weight Loss: குழந்தை பிறப்பிற்கு பிறகு ஆலியா மானசா 10 கிலோ வெயிட் லாஸ் செய்தது எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News