Indian Railways: ஜெனரல் டிக்கெட் விதிகளில் மாற்றம், உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

Indian Railways: ஜெனரல் டிக்கெட்டுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இது தொடர்பான விதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் ஒரு சிறிய தவறு கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடக்கூடும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 8, 2023, 08:56 AM IST
  • ஜெனரல் டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்தில் பயணம் செய்யவும்
  • அபராதம் செலுத்த நேரிடலாம்
  • ரயிலில் பயணிக்க பல பிரிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
Indian Railways: ஜெனரல் டிக்கெட் விதிகளில் மாற்றம், உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

இந்திய ரயில்வே அப்டேட்: இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  

அதுமட்டுமின்றி ரயிலில் பயணிக்க பல பிரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி போன்ற பிரிவுகள் இதில் அடங்கும். இதேபோல், சில ரயிலில் ஜெனரல் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பெட்டிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய தேவையில்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஜெனரல் டிக்கெட் மூலம் பயணம் செய்கிறீர்கள் என்றால், அதன் விதிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் ஒரு சிறிய தவறு கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடக்கூடும். அதன்படி ஜெனரல் டிக்கெட்களுக்கும் சில வேலிடிட்டி உள்ளது. இதன் கீழ், இந்த டிக்கெட்டுகள் மூலம் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | Indian Railways: சிக்கனத்தில் இறங்கும் ரயில்வே... பயணிகளுக்கு இதனால் பலன்கள் என்ன?

நாள் முழுவதும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளில் பயணம் செய்யும் வித்தையை நிறுத்துவதற்காக, பயணத்தைத் தொடங்குவதற்கான காலக்கெடுவை ரயில்வே நிர்ணயித்துள்ளது. முன்னதாக, நேரக் கட்டுப்பாடு விதியின் காரணமாக டிக்கெட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. இதனால், ரயில்வே துறைக்கு கடும் நிதி இழப்பு ஏற்பட்டது. இதை தடுக்கும் வகையில், 2016ம் ஆண்டு ஜெனரல் டிக்கெட்டுகளுக்கான காலக்கெடுவை ரயில்வே நிர்ணயித்துள்ளது.

ஜெனரல் டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்தில் பயணம் செய்யவும்
இந்திய ரயில்வே விதிகளின்படி, 199 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டும் என்றால், ஜெனரல் டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்திற்குள் ரயிலைப் பிடிக்க வேண்டும். மறுபுறம், பயணம் 200 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேல் இருந்தால், ஜெனரல் டிக்கெட்டை 3 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம். ஒரு பயணி 199 கிலோமீட்டருக்கும் குறைவான பயணத்திற்கு டிக்கெட் எடுத்தால், அவர் செல்ல வேண்டிய நிலையம் வரை முதல் ரயில் புறப்படும் வரை அல்லது டிக்கெட் வாங்கிய தேதியிலிருந்து 3 மணி நேரம் கழித்து அவர் பயணத்தைத் தொடங்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் டிக்கெட் 199 கிமீ தூரம் என்றால், நீங்கள் 3 மணி நேரம் கழித்து உடனடியாக பயணம் செய்ய வேண்டும்.

அபராதம் செலுத்த நேரிடலாம்
இந்த புதிய விதிமுறையை பின்பற்றவிட்டால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மறுபுறம், நீங்கள் பயணத்தை 3 மணி நேரத்திற்குள் தொடங்கவில்லை என்றால், நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்யவோ அல்லது வேறு எந்த ரயிலிலும் பயணிக்கவோ முடியாது. சிலர் ஜெனரல் டிக்கெட்டுடன் பயணத்தை முடித்தவுடன் தங்கள் பயணச்சீட்டை எடுத்து வேறு ஒருவருக்கு விற்று வந்தனர். அதன் காரணமாக நாள் முழுவதும் ஜெனரல் டிக்கெட்டில் பயணம் செய்து வந்தார். இந்த மோசடியை தடுக்க ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Indian Railways இரவு நேர பயண விதிகளில் மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News