8-வது ஊதியக் குழுவால் மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மை கிடைக்குமா?

7-வது ஊதியக் குழு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், அலவன்ஸ்களில் திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு இல்லை.  

Written by - RK Spark | Last Updated : Aug 31, 2022, 06:47 AM IST
  • 8-வது ஊதியக் குழு குறித்த எவ்வித பரிசீலனையும் அரசு செய்யவில்லை.
  • மற்றொரு ஊதியக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதப்படுகிறது.
  • மக்களுக்கான பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றத்தை மதிப்பாய்வு செய்து திருத்தப்படலாம்.
8-வது ஊதியக் குழுவால் மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மை கிடைக்குமா?  title=

சமீப காலமாகவே அரசு ஊழியர்களிடையே 8-வது ஊதியக் குழு குறித்த சலசலப்பு நிலவி வந்தது, பலரும் 8-வது ஊதியக் குழு அமல்படுத்தப்படுமா என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் 8-வது ஊதியக் குழு குறித்த எவ்வித பரிசீலனையும் அரசு செய்யவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம், அலவன்ஸ்கள் மற்றும் ஓய்வூதியங்களில்  திருத்தங்களை மேற்கொள்ள 8-வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டாம் என்று அரசாங்கம் ஆலோசித்து வருவது உண்மையா என்ற கேள்விக்கு, நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுபோன்ற திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதேசமயம் 7-வது ஊதியக் குழு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், அலவன்ஸ்கள் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மற்றொரு ஊதியக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதப்படுகிறது.  நீண்ட நாட்கள் காத்திருக்காமல் அளவீடுகளை அப்போதே பரிசீலனை செய்யலாம் என்று 7-வது ஊதியக் குழுவின் தலைவர் கூறியுள்ளதாக சவுத்ரி தெரிவித்துள்ளார்.  மேலும் கூறுகையில், Aykroyd பார்முலாவை பயன்படுத்தி சாமானிய மக்களுக்கான பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றத்தை மதிப்பாய்வு செய்து திருத்தப்படலாம். இது ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள தொழிலாளர் பணியகத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது, அதனால் மற்ற ஊதியக் குழுவிற்கும் காத்திருக்காமல், அந்த மேட்ரிக்ஸை திருத்துவதற்கு இது அடிப்படையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Post Office: போஸ்ட் ஆஃபீஸில் 100 ரூபாய் முதலீடு .. ரூ.26 லட்சம் ரிட்டன்: சேமிப்புக்கு உத்திரவாதம்

மேலும் அரசாங்கம் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களை அதிகரிக்குமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சவுத்ரி, சிம்லாவில் உள்ள லேபர் பீரோ வழங்கிய ஏஐசிபிஐ-ஐடபிள்யூ டேட்டாக்களின் அடிப்படையில் டிஏ/டிஆர் இருப்பதால் இது தேவையில்லை என்று கூறினார்.  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்  டிஏ/டிஆர் உயர்வை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.  அதே நேரத்தில் ஜூலை 1 முதல் திரிபுரா மாநில அரசு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படியை ஐந்து சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்தது.

மேலும் படிக்க | மக்கள் ஹேப்பி..பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News