ஒரு புதிய ஆட் விளம்பரமானது பேஸ்புக்கில் சுமார் 6.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது, இவ்வாறு இது ஏன் பிரபலமானது என்பதை நீங்கள் அறிந்துகொண்டே ஆக வேண்டும்!
#StandByToughMoms என்ற பெயரில் பதிவிடப்பட்ட இந்த விளம்பரமானது, நேற்று பதிவேற்றப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் மிகவும் பெரிய கருத்தினை கூறும் இந்த விளம்பரமானது ஒரு நாளில் சுமார் 6.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
அப்படி என்ன சொல்லப்பட்டுள்ளது இந்த விளம்பரத்தில்,... "தாய்மார்கள் என்றால் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளிடம் கடுமையாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறார்கள், அவர்களின் செயல்பாட்டில் நியாம் இருக்கிறது" என்பதினையே மையக்கருத்தாக கொண்டு ஒளிப்பரப்பாகிறது இந்த வீடியோ...
இந்த விளம்பரத்தில்... ஒரு கூட்டு குடும்பம் ஒன்றாக இணைந்து உணவு உன்னுகிறார்கள். மூத்த மருமகள் அனைவருக்கும் உணவு அளிக்கிறாள், தன் மகனுக்கு தான். ஆனால் அந்த சிறுவன் அந்த உனவை ஏற்க மறுக்கின்றான், காரணம் முந்தைய நாள் நிகழ்வில் தனது தந்தையின் சட்டையில் இருந்து ரூ.10-னை எடுத்ததால் தாய் அவனை தண்டிக்கும் பொருட்டு பேசாமல் இருக்கின்றார்.
இதனால் கோபமுரும் சிறுவன் தாய் கொடுக்கும் உணவை உண்ண மறுக்கின்றான், தாயும் அவனை கட்டாய படுத்தாமல் அடுத்த நகர்வினை நோக்கி நகர்கின்றாள். இதற்கு குடும்பமே அப்பெண்னை பழிக்க, மூத்த தலைவர் ஒருவர் மட்டும் அப்பெண்ணின் பக்கம் நிற்கின்றார். மேலும் தவறு எங்கே உள்ளது, யாரிடம் உள்ளது என தெளிவாகவும், சுருக்கமாகவும் தெரிவிக்கின்றார். மிகவும் சுவாரசியமாக செல்லும் இந்த விளம்பரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
அந்த வீடியோ இதோ உங்களுக்காக...