உலகின் மிக வயதான சுமத்திரா குரங்கு 62 வயதில் மரணம்!

உலகின் மிக பழமையான சுமத்திரா ஆரங்குங்குடன் குரங்கு, தனது 62-வது வயதில் இறந்ததாக ஆஸ்திரேலிய வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

Last Updated : Jun 19, 2018, 07:23 PM IST
 உலகின் மிக வயதான சுமத்திரா குரங்கு 62 வயதில் மரணம்!

உலகின் மிக பழமையான சுமத்திரா ஆரங்குங்குடன் குரங்கு, தனது 62-வது வயதில் இறந்ததாக ஆஸ்திரேலிய வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

மிகவும் வயதான இந்த அரிய வகை குரங்கிற்கு 11 குழந்தைகளும் 54 சந்ததியினரும் உள்ளனர், இவர்கள் உலகளவில் பரவியுள்ளனர் என ஆஸ்திரேலிய உயிரியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேசியா நாட்டு அரசால் கடந்த 1968-ல் திபத் மிருகக்காட்சிசாலைக்கு இந்த பஓன் பரிசாக அளிக்கப்பட்டார். பின்னர் பெர்த் மிருகக்காட்சியகத்தில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளுக்கு இவர் தனது பங்களிப்பினை அளித்துள்ளார், என பெர்த்த் மிருகக்காட்சிசாலையின் உயர்மட்ட மேற்பார்வையாளர் ஹோலி தாம்சன் தெரிவித்துள்ளார்.

தற்போது பஒன் இறந்துவிட்டாலும், அவர் எங்கள் உலக புகழ்பெற்ற இனப்பெருக்கம் திட்டத்தின் நிறுவன உறுப்பினராகவும், நம்பமுடியாத மரபுரிமையையும் விட்டு சென்றுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

11 குழந்தைகளும் 54 சந்ததியினரை பெற்றுள்ள பஒன் வம்சாவழியில் இறுதியாக அவரது பெரும் பேரன் நியுரர் சமீபத்தில் காட்டில் விடப்பட்டார்.

1956-ஆம் ஆண்டு பிறந்த இவர் கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸால் உலகிலேயே பழமையான சுமாத்திரன் ஆரங்கூட்டனாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மிருகக்காட்சியக்கத்தில் இருந்தவரை அவர் தனிமையை விரும்பி, பிறருடன் சச்சரவுகள் இன்றி வாழ்ந்தவர் எனவும் ஹோலி தாம்சன் தெரிவித்துள்ளார்.

இவர் இறந்தாலும் தற்போது அவரது மகள் மற்றும் பேரன், பெரும் பேரன் ஆகியோரை இந்த மிருகக்காட்சியக்கதில் விட்டுச் சென்றுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

More Stories

Trending News