சுக்கிரனின் கோபப் பார்வையால் துன்பப்படும் 5 ராசிகள்: எச்சரிக்கை

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரன் கிரகம், செல்வம், செல்வாக்கு, பிரபலம், புகழ், மகிழ்ச்சி, காதல் என மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அருள் புரியும் கிரகமாகும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2022, 11:02 AM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்.
  • வேலையில் வெற்றி பெறும் கும்ப் ராசிக்காரர்
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பாராட்டு
சுக்கிரனின் கோபப் பார்வையால் துன்பப்படும் 5 ராசிகள்: எச்சரிக்கை title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரன் கிரகம், செல்வம், செல்வாக்கு, பிரபலம், புகழ், மகிழ்ச்சி, காதல் என மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அருள் புரியும் கிரகமாகும்.

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுபஸ்தானத்தில் இருந்தால், அவ்ர் வசதியான வாழ்க்கையை வாழ்வார். மீனத்தில் சுக்கிரனின் பிரவேசம் சிலருக்கு நல்ல பலனையும் சிலருக்கு பின்னடைவையும் தந்து கொண்டிருக்கிறது..

சுக்கிரன் ராசி மாற்றத்தால் தனிப்பட்ட வாழ்வில் பலர் சிரமங்களையும், சிக்கல்களையும் சந்திப்பார்கள். எந்த ராசிக்காரர்கள் சுக்கிரனின் மாற்றத்தால், கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்துக் கொண்டால் எச்சரிக்கையாக இருக்கலாம்.  

ஐந்து ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். தனுசு, மீனம், கன்னி, கடகம் மற்றும் விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | ஏழரை சனியில் இருந்து தனுசு ராசிக்கு விடுதலை, சிறப்பு பலன் கிடைக்கும் 

கடக ராசி- கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். மூத்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது மற்றும் சர்ச்சையை தவிர்ப்பது நல்லது.

கன்னி - கன்னி ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கைக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும், ஆனால் உறவுகள் தொடர்பாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வீட்டில் பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணை மற்றும் மாமியார்களுடனான உறவுகளும் மோசமடையக்கூடும். விஷயம் பெரிதாகிவிடாமல் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். எதிரிகள் தீங்கு செய்ய முயற்சி செய்யலாம். நீங்கள் ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம், ஆனால் அதனால் பயனடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.

வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது கவனமாக இருங்கள், இல்லையெனில் மனவேற்றுமைகள் அதிகரிக்கும். பணியிடத்திலும், தொழிலிலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. 

மேலும் படிக்க | புத்திசாலி ஆனால் பிடிவாதம்: இது மேஷ ராசி குழந்தைகளுக்கு ஜோதிடம் சொல்லும் ஆருடம்

தனுசு - தனுசு ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இழப்புகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் சண்டை சச்சரவுகள் வீட்டில் பதற்றத்தை உண்டாக்கும். உறவுகளில் இந்த நேரத்தை கவனமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மீனம் -  மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் கடினமானதாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் இமேஜை கெடுக்க எதிரிகள் தங்களால் இயன்றவரை முயற்சிப்பார்கள். குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உறவினர்களிடம், நணபர்களிடமும் பேசும்போது வார்த்தைகளை கொட்டிவிட வேண்டாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் பதவி உயர்வைப் பெற கடினமாக உழைக்க வேண்டும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News