லேட்டஸ்ட் சென்சேஷனல் இயக்குனருடன் கூட்டணி சேரும் கார்த்தி!

இயக்குனர் அருண்ராஜ் காமராஜ் இயக்கப்போகும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 23, 2022, 08:24 PM IST
  • அருண்ராஜ் இயக்கத்தில் ஆர்டிகள் 15 படம் வெளியானது.
  • அடுத்து கார்த்தியை வைத்து இயக்க உள்ளார்.
  • இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் சென்சேஷனல் இயக்குனருடன் கூட்டணி சேரும் கார்த்தி! title=

பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட அருண்ராஜ் காமராஜ் கனா படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக புதிய அவதாரமெடுத்தார்.  ஒரு கிராமத்து பெண் பல இன்னல்களை தாண்டி எப்படி சாதிக்கிறார் என்பதை உணர்வுபூர்வமாக இப்படத்தின் மூலம் வெளிக்காட்டியிருந்தார்.  இவரது சமீபத்திய படமான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது, இப்படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.  'ஆர்டிகள் 15' என்கிற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மேலும் படிக்க | மீண்டும் இணைகிறது ஜெய் பீம் கூட்டணி... இந்த முறை எந்த சம்பவம்?

இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை காட்டிலும், நேர்மறையான விமர்சனங்களே அதிகளவில் கிடைத்துள்ளது.  தற்போது இயக்குனர் அருண்ராஜ் காமராஜ் அடுத்த படத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.  கடந்த வருடம் வெளியான சில தகவல்களின்படி, அருண்ராஜ் இயக்கப்போகும் புதிய படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  

மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இயக்குனர் அருண்ராஜ் காமராஜ், கார்த்தியை நேரில் சந்தித்து தனது படத்துக்கான கதையை பற்றி கூறியதாகவும், அந்த கதை நடிகருக்கு பிடித்துப்போய் விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.  அதோடு இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.  கார்த்தியை வைத்து இயக்கப்போகும் இந்த படத்தில் ஒரு டோலிவுட் நட்சத்திரத்தை வில்லனாக நடிக்கவைக்க இயக்குனர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  கார்த்தி தற்போது விருமன், சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News