உங்க பேச்சு திருப்தியா இருந்துச்சு - கோபிநாத்துக்கு ப்ரியா பவானி சங்கர் பாராட்டு

உங்கள் பார்வையும், பேச்சும் திருப்தியா இருந்தது கோபி அண்ணா என ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 12, 2022, 03:49 PM IST
  • நீயா நானா கோபிநாத்துக்கு ப்ரியா பவானி சங்கர் பாராட்டு
  • நீயா நானா நிகழ்ச்சியில் கணவரை மட்டமாக பேசினார் மனைவி
  • அவருக்கு கோபிநாத் தக்க பதிலடி கொடுத்தார்
உங்க பேச்சு திருப்தியா இருந்துச்சு - கோபிநாத்துக்கு ப்ரியா பவானி சங்கர் பாராட்டு title=

தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், “தன் கணவர் ஏபிசிடியையே ஒரு மணி நேரம் படிப்பார். அவருக்கு சோஷியல் சைன்ஸ்னாலே என்னவென்று தெரியாது” என மிகவும் மட்டமாக பேசினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நிகழ்ச்சியின் நெறியாளர் கோபிநாத் அந்தப் பெண்ணுக்கு தன் பாணியில் பதிலடி கொடுத்தார். அதுமட்டுமின்றி நிகழ்ச்சியின் நடுவிலேயே, “நான் பார்த்த சிறந்த தந்தைகளில் ஒருவர்” என கூறி அந்தப் பெண்ணின் கணவருக்கு அவரது மகளை வைத்தே பரிசையும் கொடுத்தார். 

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அந்தப் பெண்ணுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து கோபிநாத்துக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மேலும் அந்தப் பெண்ணை கடுமையாக் சமூக வலைதளங்களில் ட்ரோலும் செய்தனர் நெட்டிசன்ஸ்.

Neeya Naana

இந்நிலையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா. வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். 

 

முன்னதாக ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகின. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ. 100 கோடிவரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாராவா? வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News