‘எனக்கு ஆண்களை பிடிக்காது என்றெல்லாம் கிடையாது..’ மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Aishwarya Rajesh: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது தனக்கு ஆண்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என கூறினார். 

Written by - Yuvashree | Last Updated : May 29, 2023, 05:53 PM IST
  • ஐஸ்வர்யா நடித்த ஃபர்ஹானா படம் சர்ச்சையில் சிக்கியது.
  • ஆண்களை அட்டாக் செய்வது போன்ற கதைகளை இவர் தேர்வு செய்வதாக குற்றச்சாட்டு.
  • இதை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
‘எனக்கு ஆண்களை பிடிக்காது என்றெல்லாம் கிடையாது..’ மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! title=

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்குபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் சொப்பன சுந்தரி மற்றும் ஃபர்ஹானா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் ஃபர்ஹானா திரைப்படத்திற்கு பெறும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்த நிலையில் நேற்று ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது தனக்கு ஆண்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என அவர் கூறினார். 

புத்தக வெளியீட்டு விழா..

பிரபல திரையரங்க நிறுவனமான பி.வி.ஆரின் தெற்கு மண்டலத் தலைவராக உள்ளவர், மீனா சாப்ரியா. அவர், தனது வாழ்க்கை சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். Unstoppable என அந்த புத்தகத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல தொழில் முனைவோர் மற்றும் திரைப்பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷும் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் தன்னைப்பற்றிய சில தகவல்களையும் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். 

மேலும் படிக்க | ‘என்ன அழகு எத்தனை அழகு..’ மாமன்னன் நாயகி கீர்த்தியின் கலக்கல் கவுன் க்ளிக்ஸ்!

“ஏன் சினிமாவிற்கு வருகிறீர்கள் என்று கேட்டார்கள்..”

ஐஸ்வர்யா ராஜேஷ், தனது சிறுவயது வாழ்க்கை குறித்தும், சினிமாவிற்கு வருவதற்குள் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது குறித்தும் நேற்றைய நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அப்போது, தான் சினிமாவிற்கு வந்த புதிதில் ஏன் சினிமாவிற்கு வருகிறீர்கள் என சிலர் தன்னை கேட்டதாக கூறியிருந்தார். இதையெல்லாம் கடந்து தான் இந்த நிலையில் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். 

ஆண்களை பிடிக்காது என்றெல்லாம் இல்லை…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்களை அட்டாக் செய்வது போன்ற கதைகளை மட்டுமே தேர்ந்தெடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இதுகுறித்தும் அவர் நேற்றைய நிகழ்ச்சியில் பேசினார். அப்போது தான் பெண்களை மைய்யமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் அதிகம் நடிப்பதால் தனக்கு ஆண்களை பிடிக்காது என சிலர் நடித்துக்கொண்டிருப்பதாகவும் இதுகுறித்து தன்னிடம் சிலர் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார். இதை மறுத்துள்ள ஐஸ்வர்யா, தனக்கு ஆண்களை பிடிக்காது என்றெல்லாம் கிடையாது என்றும் எனக்கு பர்சனலாக தீங்கு செய்தவர்களைதான் பிடிக்காதே தவிர பிற ஆண்களை தனக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

“பெண்களில் தவறானவர்களும் உள்ளனர்..”

தொடர்ந்து மேற்கூறிய கருத்து குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்களிலும் சரி பெண்களிலும் சரி தவறானவர்கள் இருப்பதாக கூறினார். ஐஸ்வர்யா, தனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை என்றும் ஆனால் Unstoppable புத்தகத்தை படிக்க உள்ளதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியை கண் பார்வையற்ற ஒருவர் தாெகுத்து வழங்கினார். அவரை பார்த்து இம்ப்ரஸ் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த தொகுப்பாளினியிடம் ஜாலியாக கலந்துரையாடினார். 

மேலும் படிக்க | விஜய்யின் தளபதி 68 படத்தின் கதை இதுதானா? அப்செட்டான ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News